10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தூத்துக்குடி மாவட்டம், 95.42 சதவீதம்
தேர்ச்சி பெற்று, மாநிலத்தில், 2வது இடத்தை, தக்கவைத்துக் கொண்டுள்ளது.
pack
:
26 ஆண்டு சாதனையை இழந்த விருதுநகர்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று விருதுநகர்
மாவட்டம், கடந்த இரு ஆண்டுகளாக பின் தங்கி வருகிறது. இந்தாண்டு தேர்ச்சி
சதவீதத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
கால்நடை மருத்துவ கல்வி விண்ணப்ப விற்பனை 60% அதிகரிப்பு
கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, கடந்தாண்டை விட, 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிதாக சேரும் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ஏற்பாடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2
வரை, புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு மட்டும், தமிழக அரசின், இலவச
புத்தக பை வழங்கப்படும். ஏற்கனவே பை வாங்கியவர்களுக்கு, மீண்டும்
வழங்கப்படாது.
சமஸ்கிருதத்தில் முதலிடம்: 499 மதிப்பெண் பெற்ற மாணவி ரக்ஷனா
மாநில அளவில் சமஸ்கிருதம் மொழி பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி
ரக்ஷனா, "இருதய சிறப்பு மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என
தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ் மொழி பாடம் எடுக்காததால், 500க்கு, 499
மதிப்பெண்கள் பெற்றும் மாநில அளவில் முதலிடம் பெறமுடியவில்லை.
முதலிடம் பிடித்த 9 மாணவிகளின் சிறப்பு பேட்டிகள்
10ம் வகுப்பு தேர்தவில் முதலிடம் பிடித்த மாணவிகள் 9 பேர் தங்களின் ஆசைகளையும், எதிர்கால லட்சியங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இவர்கள் அளித்த பேட்டிகள் விவரம் வருமாறு:
குழந்தை தொழிலாளர் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பல்வேறு மாணவர்களின் சாதனைகளுக்கு
மத்தியில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் படைத்துள்ள
சாதனையும், முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்மாணவர்கள், மூவர் முறையே,
480, 475, 473 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் தேவையா? அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.ஐ.,) ஒப்புதல் வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து
செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், பொறியியல் கல்லூரி மனு தாக்கல்
செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அண்ணா பல்கலை, தொழிற்கல்வி
கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐகோர்ட் தலையீட்டால் பள்ளி மாணவிக்கு வெளிநாட்டு பல்கலையில் வாய்ப்பு
சிங்கப்பூர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்த, சென்னை மாணவிக்கு,
பாஸ்போர்ட் எண் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஐகோர்ட் தலையீட்டால்,
பறிபோகும் நிலையில் இருந்த வாய்ப்பு, கைகூடியது.
சுயநிதி பள்ளிகளில் விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம்
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499
மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில்,
ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம்
பெற்றுள்ளனர்.
இதர மொழிப் பாடங்களில் முதலிடம் பெற்றவர்கள் யார்?
அரபிக்
டி.அர்ஷியா பாத்திமா - ஹபீபியா ஓரி அராபிக் மகளிர் பள்ளி, ஆம்பூர் - 99 மதிப்பெண்கள்
பேச்சு மற்றும் உச்சரிப்பு பயிற்சியாளர்
இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ள பி.பி.ஓ., துறையானது பேச்சு
மற்றும் உச்சரிப்புப் பயிற்சியாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்கி
வருகிறது. திறமைமிக்க தகவல் தொடர்பாளர்கள் இளம் பி.பி.ஓ., துறையினரோடு,
திறமையை பகிர்ந்து கொண்டால் நல்ல வருமானம் ஈட்டலாம்.
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 17ல் துவக்கம்
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 17ம் தேதி துவங்க உள்ளது.
அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் 2013-14 ம் கல்வி
ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது. இப்பள்ளியில்
குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின்
ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முடிவெடுக்கும் காலம்
மாணவர்கள் புதிய புதிய எண்ணங்களுடன் எதிர்பார்ப்புகளுடனும் கல்லூரியை
தேர்வு செய்யும் அவசரத்திலும், நினைத்த கல்லூரி கிடைக்குமா? என்ற குழப்ப
மிகுதியாலும் தவிப்புடன் வலம் வரும் காலம் தான் தேர்வு முடிவு
வந்ததிலிருந்து, கல்லூரியில் சேரும் வரை உள்ள காலமாகும். மிகவும்
குறிப்பிடத் தகுந்த எதிர்காலத்திற்கான முன் அடித்தளமாக இருப்பதும் இந்தக்
காலம்தான்.
அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் லிஸ்ட் விரைவில் வெளியீடு: இயக்குநர்
தமிழகத்தில் அனுமதி பெறாத தனியார் பள்ளிகள் விவரம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்கள்: அமைச்சர்கள் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில், கல்வித் தரம், அடிப்படை
கட்டமைப்பு மற்றும் கல்வி திட்டங்களை மத்திய அரசு துணையோடு செயல்படுத்துவது
குறித்த ஆலோசனை நடந்தது.
பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்
உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற
ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே.
ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈக ஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை
தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும்
தெரியாது.
10½ லட்சம் மாணவ–மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியாகிறது
0½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்
"மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து
தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட
தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் பதிவு அவசியம்: போக்குவரத்து துறை
"பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும், ஆட்டோ உள்ளிட்ட பிற
வாகனங்கள் குறித்த விவரத்தை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள
வேண்டும்" என போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கவுன்சிலிங் எப்போது?
தமிழகம் முழுவதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ்
இயங்கும், பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், இன்று (30.05.2013) நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், மாவட்ட அளவில்,
அதிக மதிப்பெண்கள் பெறும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து சம்பாதிப்பதற்கான சிறந்த பணிகள்
இன்றைய பொருளாதார சூழலில் பட்டம் முடித்தவர்களுக்கு பொருத்தமான வேலை
கிடைப்பது என்பது பல்வேறு சிரமங்களை உள்ளடக்கியுள்ளது. ஒரு புறம் புதிய
வேலைகள் உருவாகி வந்தாலும், படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற
விகிதத்தில் இந்த எண்ணிக்கை இல்லை.
கால்நடை மருத்துவ படிப்பு: 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
கால்நடை மருத்துவ படிப்பிற்கு, 15,175 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. நாளையுடன் (31ம் தேதி) விண்ணப்ப விற்பனை முடிவடைய உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி; 700 ஆசிரியர்கள் புறக்கணிப்பு
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரி மையங்களில், விடைத்தாள் திருத்தும்
பணி தொடர்பாக, கொண்டு வரப்பட்ட புதிய நடைமுறைக்கு, 700 ஆசிரியர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வு முடிவு - பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்
சென்னை மண்டல விபரம் - 2013
அரசுப் பள்ளிகள் | 64.66% |
இன்டிபென்டன்ட் | 93.66% |
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் | 98.67% |
கேந்திர வித்யாலயா பள்ளிகள் | 97.13% |
சென்ட்ரல் திபெத்தன் பள்ளிகள் | 91.15% |
தனியார் பள்ளிகள் | 47.73% |
அரசு உதவிபெறும் பள்ளிகள் | 0 |
குறையாத வெயிலின் தாக்கம்: பள்ளி திறப்பு தேதி மாற்றம்
தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி,
அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும்
என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
யுனெஸ்கோ போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை
யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தமிழக கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குழந்தைகளை மையப்படுத்தும் மாற்றுக் கல்விமுறை
பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்த அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும்
பொருட்டு, சம்பிரதாய கற்பிக்கும் முறைகள், மறுஆய்வு செய்யப்படுகின்றன.
வகுப்பறையோ, கரும்பலகையோ அல்லது வளாகமோ இல்லாத ஒரு பள்ளியை, உங்களால்
கற்பனை செய்து பார்க்க முடியுமா?
தேர்தல் பணியில் சிறுவர்களுக்கு தடை: தேர்தல் கமிஷன் உத்தரவு
"வாக்காளர் விழிப்புணர்வு முகாம், தேர்தல் பிரசாரம்
போன்றவற்றில், சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது" என, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தும்
சட்டம், 1986ன் படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஓட்டல், வணிக
நிறுவனங்களில் பணியமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்
"ஆசிரியர்கள் கூறுவதையே குழந்தைகள் அதிகம் நம்புகிறார்கள்"
என, பயிற்சி வகுப்பில் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஜோஸப் அலெக்ஸாண்டர்
பேசினார்.
பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்
தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்.,
படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல்
மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.
சி.பி.எஸ்.சி., பிளஸ் 2 தேர்வை 2013ல் எழுதி தேறிய மாணவ-மாணவிகள்
சென்னை மண்டல விபரம் - 2013
தேர்வெழுதியோர் விபரம்
ஒட்டுமொத்தமாக தேர்வெழுதியோர் - 77,616
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
மாணவர்கள் - 42,253
மாணவிகள் - 35,363
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக
மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு
வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியரை, தலைமை ஆசிரியர் எரித்து கொன்ற கொடூரம்
பீகாரில்
உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்
மற்றும் பிற ஆசிரியர்கள் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி, கொன்றிப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்
கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது மத்திய
அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர்
பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில
முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல, பச்சையப்பன் அறக்கட்டளையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு
தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்
"ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே
கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத்
தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், அதிகாரம்
இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர
சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."
"பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும்
தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக்
கொள்ள வேண்டும்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு)காளிராஜ்
பேசினார்.
"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"
"இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.
ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும்,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல்
நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம்
பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில்
வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த
மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம்
தேதி வெளியிடப்பட்டது.
நாட்டுப்புறவியலில் நாட்டமா?
இந்தியாவில் நாட்டுப்புற கலைகளின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதன்
பெருமையை மங்காமல் பார்த்துக் கொள்ளும் வகையில், சென்னையில் தேசிய
நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் செயல்பட்டு வருகிறது.
கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்
கண்ணாடி, மண்பாண்டம் மற்றும் அவை தொடர்பான துறைகளுக்கு அறிவியல்,
தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வழங்க உருவாக்கப்பட்டது தான்
மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு
மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில்,
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில்
மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்
நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்து விட்டதா
என்பதை அறிய மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை
2013-14ம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உதவி
பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கடைச்சரக்கல்ல கல்வி : உரத்த சிந்தனை
அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய கருவி, கல்வி. மனிதர்களுக்கு
எப்படிப்பட்ட கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி, சுவாமி
விவேகானந்தர் சொல்லும் பொழுது, "மனிதர்களை, மனிதப் பண்புகளை உருவாக்கக்
கூடிய கல்வியே தேவை; வெறும் வயிற்றுக்குச் சோறிடும் கல்வி தேவையில்லை'
என்பார்.
மாற்றங்களுக்காகக் குழந்தைகள் காத்திருக்கிறார்கள் .-உதயசங்கர்
குழந்தைகள்
அவரவர் பெற்றோர்கள்வழி வந்திருந்தாலும் அவர்கள் மானுட இனத்திற்கே
சொந்தமானவர்கள். மனித இனம் தழைக்க,
நீடித்திருக்க, வந்த அற்புத மலர்கள்.
ஒவ்வொரு குழந்தையும் இந்த சமூகத்தின் பொக்கிஷம்.
சாலையில் கிடந்த பல்கலை விடைத்தாள்: அதிகாரி விசாரணை
அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், சாலையில் கிடந்தது
தொடர்பாக, திருச்சி ரயில்வே அஞ்சல் துறை முதன்மை கண்காணிப்பாளர்,
விருத்தாசலத்தில் நேற்று, விசாரணை நடத்தினார்.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான
நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு
தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"தமிழக மதிய உணவுத் திட்டம்: ஐ.நா. பாராட்டு"
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்
"கல்வி மட்டுமே திருட முடியாத செல்வம்; பொருளாதார பிரச்னை,
எப்போதும் கல்விக்கு குறுக்கே தடையாக நிற்கக்கூடாது," என கலெக்டர்
கோவிந்தராஜ் பேசினார்.
ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு
ஜப்பானில் உள்ள கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சகம், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி,
தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைகள் (இளநிலை படிப்பு) போன்றவற்றில் சேர
விரும்பும், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
இக்கல்வி உதவித் தொகை ஏப். 2014 முதல் மூன்று, நான்கு, ஐந்தாண்டு படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட
மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி
கல்வித் துறை அறிவித்துள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும், சிவில்
சர்வீசஸ் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், தமிழகத்தில், 30 ஆயிரம் பேர்
உட்பட, நாடு தழுவிய அளவில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத
உள்ளனர்.
சமூக சேவை: மாணவர்களை பொறுப்புள்ள குடிமகன்களாக்கும்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கடந்த
பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, 28 பவுன் நகை பறிக்கப்பட்டதாக, 7
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மதிப்பெண் பட்டியலுக்கு பணம் வசூலித்தால் நடவடிக்கை
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் பெறும் மாணவ, மாணவிகளிடம் பணம்
வசூல் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கல்வி
அலுவலக நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பாடு
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி
வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய,
பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.
"தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு
பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும்,
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு: அரசுக்கு, கல்வித்துறை அறிக்கை - "தினமலர்"
தொடக்க கல்வித் துறையில், பதவி உயர்வு இல்லாமல் தவிக்கும் பட்டதாரி
ஆசிரியர் நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை, அறிக்கை
சமர்ப்பித்தது.
மருத்துவக் கல்வியில் முன்னேறிவரும் இந்தியா!
நவீன தொழில்நுட்பம் மற்றும் விரிவான முறையிலான ஆராய்ச்சி போன்ற
காரணங்களால், உலகளாவிய மருத்துவ கல்வியில், இந்தியா முக்கிய இடத்தைப்
பெற்றுள்ளது. இங்கு, நூற்றுக்கணக்காக மருத்துவ கல்லூரிகள் மற்றும்
பல்கலைகள் உள்ளதும் ஒரு காரணம்.
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுவடியியல் பட்டய வகுப்பு
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்புக்கான
நுழைவுத்தேர்வு, ஜூன், 15ம் தேதி நடக்கிறது. அதற்கான, விண்ணப்பத்தை, அடுத்த
மாத இறுதிக்குள், அனுப்ப வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?
பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50
சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை
மேற்கொள்ளவுள்ளது.
பள்ளிகளின் இட பரப்பளவிற்கு ஏற்ப மாணவர் எண்ணிக்கை?
"தனியார் பள்ளிகளில் உள்ள இட பரப்பளவிற்கு ஏற்ப, எத்தனை மாணவ, மாணவியர்
வரை அனுமதிக்கலாம் என்பதை, வரையறுக்க வேண்டும்" என தமிழக அரசு நியமித்த
வல்லுனர் குழுவிடம், பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
சட்டப்படிப்பு: 2,700 விண்ணப்பங்கள் விற்பனை
சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 2,700ஐ தாண்டியது. மூன்றாண்டு
பி.எல்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
பொறியியல் படிப்பு: 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
பி.இ., மற்றும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள்,
மும்முரமாக நடந்து வருகின்றன. பி.இ.,க்கு விண்ணப்பித்த மாணவர்களின்
எண்ணிக்கை, இறுதியாக, 1.89 லட்சமாக உயர்ந்தது.
கால்நடை மருத்துவ படிப்பு: 13 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
கால்நடை மருத்துவ படிப்பிற்கு, 13,450 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.
கால்நடை மருத்துவ படிப்பில் மொத்தம், 360 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான
விண்ணப்ப வினியோகம், மாநிலம் முழுவதும், 18 மையங்களில், கடந்த, 13ம் தேதி
துவங்கியது; 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூன் 17 முதல் விண்ணப்பம் வழங்கப் படுகிறது!
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
உதயமாகும் புதிய படிப்புகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இன்ஜினியரிங் படிப்பு என்பது
வசதி படைத்த மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும் மட்டும் படிக்கும்
படிப்பாக இருந்தது. இன்று நிலை தலைகீழாக உள்ளது.
அசல் மதிப்பெண் பட்டியலின் நகலை அனுப்ப உத்தரவு
பிளஸ் 2 மாணவர்களுக்கான, மதிப்பெண் பட்டியல், வரும், 27ம் தேதி
வழங்கவுள்ள நிலையில், அதன் பின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்போர், அசல்
மதிப்பெண் பட்டியலின் நகலை மட்டுமே அனுப்ப வேண்டும் என, கால்நடை பல்கலை
அறிவித்துள்ளது.
ஆன்-லைன் பதிவால் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேட்டிற்கு இடமில்லை
கவுன்சிலிங்கில், ஆசிரியர் விபரத்தை "ஆன்-லைனில்" பெற்று, மாநில பதிவு
மூப்பு படி, முறைகேடின்றி இடமாறுதல் வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அடைகின்றனர்.
சி.டி.இ.டி., (CTET) தேர்வு நேரம் அதிகரிப்பு
சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
மருத்துவ பட்டமேற்படிப்பு குறித்த கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவி்த்துள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட கால அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது
புதிய கல்வி ஆண்டில் படிப்பது எப்படி? மனம் திறக்கும் மாணவர்கள்
கோடை விடுமுறை நாட்களை உல்லாசமாக கழித்து, மீண்டும் பள்ளிப் படிகளில்
காலடி பதிக்க காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும், இந்தாண்டும் பல கனவுகள்,
லட்சியத்துடன் படிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
"பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே, பள்ளிகளில் பாடம் நடத்த நியமிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் முறைகேடு: சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், புரோக்கரிடம் முறைகேடாக
வினாத்தாளை வாங்கி தேர்வெழுதி, பதவி பெற்றவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார்
விசாரணை நடத்துகின்றனர்.
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை குறைவு
நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி சாத்தியமா?
காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிப்பது, சாத்தியப்படாத சூழலே
நிலவுகிறது.
கால்நடை மருத்துவ படிப்பு: 11 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 11 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து, மேலும், 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அரசு துறை தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு,
டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்"கள் வெளியிடப்பட்டுள்ளன.
490 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்,
490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு
செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 3ம் தேதி பள்ளி திறந்ததும்,
பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
ஆவணங்களை மொழி பெயர்க்க ரூ.80 லட்சம்; தமிழ் பல்கலை துணைவேந்தர் தகவல்
"மஹாராஷ்டிரா மாநில அரசின் மராட்டி வளர்ச்சித்துறை
சார்பில், தஞ்சை தமிழ் பல்கலையில் ஆவண காப்பகத்திலுள்ள மோடி ஆவணங்களை
மின்படியாக்கம் செய்து, மொழிபெயர்த்து, தொகுதிகளாக வெளியிடும்
திட்டத்துக்கு, 80 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல்
தரப்பட்டுள்ளது," என தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை கூறினார்.
முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு
எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை
மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மே 25 முதல்,
29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கலையரங்கில்
நடக்கிறது.
இதற்கான, நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான, கால அட்டவணை, http://www.tnhealth.org
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பு
கடிதத்தையும், இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்
"தமிழகத்தில் உள்ள, 160 ஊர் புற நூலகங்களை, கிளை நூலகங்களாக
தரம் உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது," என அமைச்சர் முனுசாமி
தெரிவித்தார்.
நேர மேலாண்மையை கற்றுக்கொடுப்பது எப்படி?
நேர மேலாண்மைத் திறனை, பொதுவாக, தங்களின் பெற்றோரிடமிருந்தே, பிள்ளைகள்
கற்றுக்கொள்கின்றனர். பெற்றோரிடம், நேர மேலாண்மை பழக்கம் இல்லையெனில்,
குழந்தைகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
1080 மதிப்பெண் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவருக்கும் முழு கல்வி உதவித்தொகை
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 1080 மதிப்பெண் பெற்ற
அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும் இந்த ஆண்டு தங்கள் அறக்கட்டளை
சார்பில் முழு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கோவை ஸ்ரீ விஜயலட்சுமி
பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தெரிவித்தார்.
மாறுதல் பெற்றும் விடுவிக்காததால் குழப்பம்
நீலகிரியில்
பணிபுரியும், அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியப்
பயிற்றுனர்கள், கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் பெற்றும், பணியில் இருந்து
விடுவிக்கப்படாமல் இருப்பதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது."அரசு
ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊர்களில் பணி செய்யும் போது தான், மன நிறைவுடன்,
முழு ஈடுபாடுடன் பணி செய்வர்' என்பதால், மாநில அரசு, ஆண்டுதோறும்,
கவுன்சிலிங் நடத்தி, ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்தில், பணி
நியமனம் வழங்கி வருகிறது.
மருத்துவ படிப்புக்கு 28,300 பேர் விண்ணப்பம்: ஜூன் 6ல் தரவரிசை பட்டியல்
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர்
விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம்
தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட
கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் 900 பேருக்கு இடமாறுதல் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தலைமை ஆசிரியர்கள் பணியிடம்
மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 900 பேர் புதிய
இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி துறையில், பல்வேறு
வகையான ஆசிரியர்களுக்கு பொது பணியிடம் மாறுதல் வழங்கும் கலந்தாய்வு
நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - நிகழ்ச்சி விபரம்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
தினமலரில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பிரபல
கல்வியாளர்கள் கலந்துகொண்டு, தொலைபேசி மூலம் மாணவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கிறார்கள்.
பாடநூல் கழக அலுவலகத்தில் புத்தக விற்பனை விறுவிறுப்பு
சென்னையில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து
வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்கள், விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகிறது.
சில்லரை கடைகளில், ஜூன், 2வது வாரத்தில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன்,
3ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சென்னை, டி.பி.ஐ.,
வளாகத்தில் உள்ள பாடநூல் கழக அலுவலகத்தில், அனைத்து வகுப்புகளுக்கும்,
தற்பாது பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பத்தாம்
வகுப்பு மற்றும், பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்களும்,
பெற்றோரும், ஒரு மாதமாக அவதிப்பட்டு வந்தனர்.
பிளஸ் 1 புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகம்
மாணவியர், பாலியல் தொந்தரவுக்கு ஆளானால், உடனடியாக புகார் செய்வதற்கு
வசதியாக, "சைல்டு ஹெல்ப் லைன்" என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கட்டணமில்லா
தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சட்ட படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்: ஜூன் 25க்குள் தரவரிசை பட்டியல்
சட்டப்படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று
துவங்கியது. விண்ணப்பங்களை, அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறலாம்.
ஜப்பானில் உதவித்தொகையுடன் கல்வி
ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி மற்றும்
பல்கலைக்கழகங்களில், உதவித்தொகையுடன் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை அவசியம்: டாக்டர்கள் சங்கம்
"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்
கூறியதாவது:
பிளாஸ்டிக் டெக்னாலஜி
இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. குறைந்த விலை, பலதரப்பட்ட உபயோகம், பலவிதமான உருவாக்கம் மற்றும் உழைப்பின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகில் இரும்புக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக். பேக்கேஜிங் துறையில் ரப்பர், மரம், கண்ணாடி, பேப்பர் போன்றவற்றுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்படுகிறது.
தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் கிடுகிடு: நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்
கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் கட்டணத்தை தாறுமாறாக வசூலித்து வருவதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
கல்லூரியில் இடம் கிடைப்பது வெற்றியல்ல: ரமேஷ்பிரபா
"இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைப்பது மிகவும் சுலபம். ஆனால்,
அதுமட்டும் வெற்றியல்ல; பிடித்த பாடத்தை தேர்வு செய்து, நன்றாக படித்து,
படிப்பை முடிக்க வேண்டும்; அதுவே, உண்மையான வெற்றி,'' என,
கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
சென்னை நந்தனம் கல்லூரியில் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு
நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் பட்ட படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு,
மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக காத்து கிடக்கின்றன.
டேட்டா சயின்டிஸ்ட் - ஒரு பன்முக நிபுணர்
கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கப்பட்ட டேட்டா சயின்ஸ் என்ற
பதம், இன்றைய நிலையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. போர்ப்ஸ் மற்றும்
சி.என்.என்., போன்ற முக்கிய சர்வேக்கள், டேட்டா சயின்டிஸ்ட் பணியை, இன்றைய
நிலையில், மிகுந்த வளர்ச்சியடைந்த பணிகளுள் ஒன்றாக மதிப்பிட்டுள்ளன.
இவர், இப்படி..."பிரம்மோஸ்" ஏவுகணையின் தந்தை
பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக்
கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை
தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை.
பிளஸ் 2 முடித்த 7 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு
பிளஸ் 2 முடித்த, ஏழு லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில், புதிதாக
சேர்க்க, கல்லூரிகளிலேயே விண்ணப்பம் வழங்குமாறு, தமிழக தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, 18 வயது பூர்த்தியான
அனைவரும், வாக்காளர் அடையாள அட்டை பெற தகுதியுடையவர்கள். கடந்த சில
ஆண்டுகளாக, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், தேர்தல் தனிப்பிரிவு
செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில், 82 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மேலும், 20
லட்சம் பேர் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா?
சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கல்லூரிகள், மாணவர்கள், பிற
மாநில மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள கோவையை, சிவில் சர்வீசஸ்
தேர்வுகளுக்கான மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பிளஸ் 2 தேர்வில் சாதித்த குழந்தை தொழிலாளர்கள்
ஒரு காலத்தில் படிக்க வழியின்றி, கூலி வேலைக்கு சென்ற குழந்தை
தொழிலாளர்கள், தற்போது பிளஸ் 2 தேர்வில், 1,000 மதிப்பெண் எடுத்து, சாதனை
படைத்துள்ளனர். இவர்கள், பொறியியல், மருத்துவக் கல்லூரியில் இடம்
கிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.
9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம்
9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல் மேலாளர் பணி
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல்
பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கு இந்தியன் வங்கியின் வேலைவாய்ப்புப் பயிற்சி
சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, இந்தியன்
வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி அணையில்
இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்
விஜயகுமார் தெரிவித்தார்.
பி.எஸ்.என்.எல். சார்பில் "விடியோ டெலிபோனி' சேவை
பி.எஸ்.என்.எல். சார்பில் தரைவழித் தொலைபேசி
பயன்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையிலான "விடியோ டெலிபோனி' சேவை
வெள்ளிக்கிழமை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
வேலைக்கேற்ற தேவை!
இந்திய மக்கள்தொகையில் 54% பேர் இருபத்து நான்கு வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களில் படித்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், "திறனுடைத்
தொழிலாளர்' (ஸ்கில்டு லேபர்) கிடைப்பதில்லை என்பதுதான் மிகப்பெரும்
குறைபாடாக இருக்கிறது.பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, மருத்துவக்
கல்லூரி, கலை - அறிவியல் கல்லூரி என எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துப்
பட்டம் பெற்றவர் என்றாலும், அவர் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடும் திறமை
இல்லாதவராக இருக்கிறார்.
மே. 21-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு
மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மே.
21ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசி
பொறியியல் படிப்புகளில் சேர இம்மாத 20ம் தேதி
கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக்., படிப்புகளில் சேர மே
4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்
தமிழக ஒட்டு மொத்த வரலாற்றில் பள்ளிக் கல்வி
மற்றும் உயர்கல்விக்காக நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி
ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்,
இளநிலை கல்வியியல் படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்
தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின்
கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில்
என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.
BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்
வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
தமிழகத்தில் 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
"மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த,
தனியார் பள்ளி, பாதிக்கப் பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என,
நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரவி என்பவர்,
வியாசர்பாடி, டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக, மாவட்ட நுகர்வோர்
கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:கடந்த, 2007-08ம் கல்வியாண்டில், என் மகள்
ரம்யா மற்றும் ஜெகன், எதிர் மனுதாரர் பள்ளியில், முறையே, மூன்றாம் வகுப்பு
மற்றும் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர். தண்டனை என்ற பெயரில், 2007 மார்ச்,
28ம் தேதி முதல், ஏப்ரல், 4ம் தேதி வரை, ரம்யாவை, இருட்டறையில் சிறை
வைத்தனர். இதுதொடர்பாக, முதல்வர் தனிப் பிரிவு, கல்வித் துறை அதிகாரி
மற்றும் மனித உரிமைகள் அமைப்பில் புகார் செய்யப்பட்டது.
இச்சம்பவம்
குறித்து, உதவி கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். பின், பள்ளி
நிர்வாகத்துடன் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, ரம்யாவை மட்டும் பள்ளியில்
சேர்த்துக் கொள்ள, ஒப்புக் கொண்டனர். அவளை பள்ளியில் அனுமதித்த பின்,
திடீரென பள்ளியை விட்டு வெளியேற சொன்னதுடன், மாற்றுச் சான்றிதழையும் தர
மறுத்தனர்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, சென்னை (வடக்கு) நுகர்வோர் கோர்ட், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டை சேவை குறைபாடாக கருதி, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "எதிர்மனுதாரர், தன் விருப்பப்படியே, அவரின் மகள் ரம்யாவை பள்ளியை விட்டு நிறுத்தினார். அவருக்கு, மாற்றுச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. எதிர்மனுதாரர், பள்ளி நற் பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளதால், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி
"குரூப்-2 தேர்வில், தேர்வு பெற்று, மூன்று மாதங்களாக பணி கிடைக்காமல்
அவதிப்பட்டு வரும் தேர்வர்கள், விரைவில் பணி நியமனம் பெற, நடவடிக்கை
எடுக்கப்படும்" என டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் தெரிவித்தார்.
அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்
"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின்
நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி
ஆண்டில், வழக்கம் போல் இயங்கலாம்" என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"
அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்படும்
குழு, பெயரளவில் செயல்படுவதாக, கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளில், ஒவ்வொரு ஆண்டு மாணவர் சேர்க்கையின் போதும், மதிப்பெண்
அடிப்படையிலான இடஒதுக்கீடு செய்ய, அந்தந்த கல்லூரி நிர்வாகம், "மாணவர்
சேர்க்கை குழு&'வை அமைக்கிறது.
மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நேற்று
வரை, 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, நாளை மறுநாள் (20ம் தேதி), மாலை, 5:00 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத 23 நர்சரி பள்ளிகள் மூடல்
சிவகங்கை மாவட்டத்தில், அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 23 நர்சரி பள்ளிகளை மூட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில், 115 நர்சரி பள்ளிகள், அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்றன.
அரசு விதிப்படி நடத்தாமலும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல், சில பள்ளிகள்
இயங்கின. உதவி தொடக்க கல்வி அலுவலர், நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம்
குறித்து, ஆய்வு செய்தார்.
இதில், 23 நர்சரி பள்ளிகள், அங்கீகாரம் இன்றி இயங்கியது தெரிந்தது.
இதையடுத்து, "மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து, பள்ளியை
மூடவேண்டும்" என, பள்ளி நிர்வாகிகளுக்கு, "நோட்டீஸ்&' அனுப்பப்பட்டு
உள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வில், 23
பள்ளிகளை மூட, உத்தரவிட்டு உள்ளோம். இன்னும், 20 பள்ளிகள், அங்கீகாரத்தை
புதுப்பிக்காமல் உள்ளன. அவற்றிக்கு அவகாசம் வழங்கியுள்ளோம். அங்கீகாரத்தை
புதுப்பிக்காவிடில், அந்த பள்ளிகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் ஜூன் 1 முதல் கலந்தாய்வு
எஸ்.ஆர்.எம்., பல்கலையில், ஜூன் 1ம் தேதி முதல், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது.
நமது சமூகத்தில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் இயந்திரத்தனமாகவே உள்ளது: அமித் சவுத்ரி
எழுத்தாளர், இசைக்கலைஞர் மற்றும் பேராசிரியர் என்ற தகுதிகளையுடைய,
பிரிட்டனின் கிழக்கு ஆங்லியா பல்கலையின் இலக்கிய பேராசிரியர் அமித்
சவுத்ரியின் பேட்டி;
தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு
"முப்பருவக் கல்வி முறைத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல், ஒன்பதாம்
வகுப்பு வரை, தமிழ்ப் பாடம் நீங்கலாக, இதர பாடங்களுக்கு, தனியார்
பதிப்பகங்கள் புத்தகங்களை அனுப்பலாம்" என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து
உள்ளது.
குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்
"டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1 முதன்மைத் தேர்வில், 1,330 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால்
மூலமாகவோ, தேர்வாணைய இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய
வேண்டும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு
எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர்
தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை,
ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.
நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்
ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை
கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு
எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை
பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு
அறிவுரைகளை வழங்கும் வகையில் 3 மையங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வி.ஐ.டி., பல்கலையில் பி.டெக்., கவுன்சிலிங் தொடக்கம்
வி.ஐ.டி., பல்கலையில், பி.டெக்., பட்டப்படிப்பிற்கான மாணவர் கலந்தாய்வை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று துவக்கி வைத்தார்.
பணி நிரவல் திட்டத்தை கைவிடக் கோரி நெல்லையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்
கோரி, திருநெல்வேலியில் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி
ஆசிரியர் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்
"கல்வித்துறை மூலம் வழங்கப்படும், விலையில்லா பொருள்களை
கொள்முதல் செய்து வினியோகிக்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்
என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
கூறினார்.
அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்
"அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளம்
உருவாக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்ட முன்வடிவு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்
பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம்
ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்பட உள்ளன.
மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30
ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முதல் கட்ட
தேர்வான, "ஜே.இ.இ., முதன்மை" , தேர்வில் பீகாரின் "சூப்பர் 30" நிறுவனம்,
நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை
பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகளை அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நர்சரி சேர்க்கைக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது
நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கு இலவச கட்டாய கல்வி
உரிமைச் சட்டம் பொருந்தாது என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை
எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சதுரங்கப்போட்டி காரைக்காலில் துவங்கியது
காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்க போட்டி நேற்று துவங்கியது.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ,
மாணவியருக்கு, தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே, 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் ஆன்-லைன்
கவுன்சிலிங் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர்
கையெழுத்து பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க
வேண்டும் என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது .இந்த விவரத்தை
வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் இருந்து கட்டணத்தை
வசூலித்தால், குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரம், உடனடியாக ரத்து
செய்யப்படும் என, மாவட்ட கல்வி துறை எச்சரித்துள்ளது.
விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?
பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்கால
வேலை வாய்ப்புக்கு தகுதியான பாடங்களை பெற்றோர்களும், மாணவர்களும் தொலை
நோக்கு பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோர் மாணவர்களை
வற்புறுத்தியும், மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்தும், படித்தால்
எதிர்கால வாழ்வு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும், என கல்வியாளர்கள்
அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிற்கு குறைந்தது 100 சினிமாப் பள்ளிகள் தேவை: சுபாஷ் காய்
பாலிவுட் சினிமா பிரபலமும், விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் எனும் சினிமாப் பள்ளியின் நிறுவனருமான சுபாஷ் காய் அளித்தப் பேட்டி;
2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்த 2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு
உலகின் மிகப்பெரிய சொத்து கடல்.பல்வேறுவகையான
உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில்
இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல்
பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப்பணிகள், கப்பல்பணிகள், கடல்
தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம்.
பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....
நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப்
படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி
அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள்
10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக்
கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure )
அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும்.
மீன்வள அறிவியல் படிப்பு
கொச்சியில் உள்ள Central Institute of Fisheries
Nautical & Engineering Taining (CIFNET) கல்வி நிலையத்தில் நடைபெற
இருக்கும் ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்பு:
Bachelore of Fishery Science (Nautical Science) - 4ஆண்டுகள்
கடல்சார் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில் செய்முறை மற்றும் onboard Training, on ocean going fishing vessels ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.
தகுதி; 12ம் வகுப்பில் (ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல்) பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
வயது: 17 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: 12ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 நேரில் பணமாக அல்லது மாற்றத்தக்க வதையில் வரைவோலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை www.cifnet.go.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 0484-2351610, 2351493, 2351790 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.
வழங்கப்படும் படிப்பு:
Bachelore of Fishery Science (Nautical Science) - 4ஆண்டுகள்
கடல்சார் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில் செய்முறை மற்றும் onboard Training, on ocean going fishing vessels ஆகிய பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும்.
தகுதி; 12ம் வகுப்பில் (ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல்) பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
வயது: 17 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: 12ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 நேரில் பணமாக அல்லது மாற்றத்தக்க வதையில் வரைவோலை எடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை www.cifnet.go.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 0484-2351610, 2351493, 2351790 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.
பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்
பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!
எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை அனைத்துப் பாடத்திட்ட
மாணவர்களும் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில பாடத்திட்ட
மாணவர்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள மாற்றுச் சான்றிதழை (டி.சி.) வரும் மே
30-க்குள் அளித்தால் போதும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம்
தெரிவித்துள்ளது.
18, 19-ல் ரஷிய கல்விக் கண்காட்சி
ரஷிய கலைப் பண்பாட்டு மையம் சார்பில் ரஷிய கல்விக் கண்காட்சி சென்னையில் மே 18, 19-ஆம் தேதிகளில் நடக்கிறது.
ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த முகாம்
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், 10 மற்றும் பிளஸ் 2
படிக்கும் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புகள் குறித்த முகாமை நடத்துகிறது.
சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?
மலேசிய கல்வித்துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான்,
சமீபத்தில் கூறுகையில், "மலேசியாவில் மலாய் மொழி பள்ளிகள் மட்டுமே செயல்பட
வேண்டும். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளை தடை செய்ய வேண்டும். அப்போது
தான் தேச ஒற்றுமை ஏற்படும்" என்றார்.
பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது
பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த
ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு,
விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று
தீர்ந்தன.
10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்
மகாராஷ்டிரா மாநில, 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள,
இந்திய வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி,
அம்மாநிலம், சீனாவுக்கு சொந்தமானதாக காட்டப்பட்டுள்ளது.
பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை
ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:
ராமநாதபுரம்¢ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள பகுதி நேர கணினி
ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும்
தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
செய்யப்படவுள்ளனர்.
அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்
வரும் கல்வி ஆண்டில் (2013-14) இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி
கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி
ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும்.
முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம்
முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்காக தாலுகா அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறு; ஆங்கிலம், பிகாம்., பாடங்களுக்கு மவுசு
நெல்லையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
விண்ணப்பங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் பிஏ.,
ஆங்கில இலக்கியம் மற்றும் பிகாம்., படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
சான்றிதழ்கள் பெற மாணவர்கள் திண்டாட்டம்
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆறு நாட்களே உள்ளதால்,
உரிய சான்றிதழ்களை பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர். பிளஸ் 2
முடித்த மாணவர்கள், மேல்படிப்பை தொடரவும், முதல் பட்டதாரி சான்று பெறவும்,
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கவும், இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட
வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ் தேவைப்படும்.
பல்வேறு துறைகளில் வலம்வரும் புள்ளியியல் நிபுணர்
வியாபாரம் மிகுந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில், பொருட்களை வாங்கிவிட்டு,
கேஷியரிடம் சென்றால், அவர் அவசரமாக நீங்கள் வாங்கிய அனைத்துப்
பொருட்களையும் ஸ்கேன் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இந்த டிஜிட்டல்
டேட்டாவானது சரியாக பகுப்பாய்வு(analyse) செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட
நிறுவனம், லாபமடைவதற்கு பேருதவியாக இருக்கும்.
இந்த இடத்தில்தான், புள்ளியியல் நிபுணர் உள்ளே வருகிறார். அவர் டேட்டா பதிவுகளை ஆராய்கிறார்.
சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவருக்கு விருது: முதல்வர்
"தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த
தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, புதிய விருதுகள் வழங்கப்படும்," என,
முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்
ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த
வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி
மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்
அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாளில், திருக்குறளுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள்
காட்டுதல்" என்ற ரீதியில் கேள்வி கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள்
கொடுத்து, விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு: தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பிளஸ்–2 படிக்காமல் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை திரும்பப் பெற்ற கல்வி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் : முதல்வர்
தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐகளில் பணிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.
மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது:
""மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள்,
பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது,'' என, தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலை ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு போர்டு உறுப்பினர் கோகிலா
தங்கசாமி பேசினார்.
கல்வித்துறையின் கவனத்திற்கு... தினமணி தலையங்கம்
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 தேர்வின்போது வெற்றிபெற்ற
மாணவர்களின் பேட்டிகள், ஏழை மாணவர்களின் சாதனைகள் என எல்லாமும் மனநிறைவு
தரும் செய்திகளாக வந்து விழும்போது, "கல்வித்துறையின் தனிப்பட்ட சாதனை'
என்ன என்பதைப்பற்றி யாரும் யோசிப்பதில்லை.
நாளை முதல் பிளஸ் 2 புத்தகங்கள் விநியோகம்
பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு
நாளை முதல் விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக
வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, கடுமையாக சரிந்துள்ளது.பள்ளி
கல்வித் துறை மானிய கோரிக்கை, கொள்கை விளக்க குறிப்பு புத்தகம்,
சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
போட்டி போட்டு வசூலிக்கும் டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்...
கட்டணம் என்ற பெயரில், டி.ஆர்.பி.,யும், தேர்வுத் துறையும்,
தேர்வர்களிடம் இருந்து, அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
பகல் கொள்ளை அடிக்கும் இந்தச் செயலை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
என, தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
13 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்கள்:நியமன அறிவிப்பு இல்லை
உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையை, தமிழக அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கலந்தாய்விற்கு முன் அறிவிக்கப்படுமா?
அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக,
எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய
மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
"இன்ஜினியரிங் கல்லூரிகளில் தேவையற்ற படிப்பு இருக்காது"
"இன்ஜினியரிங் கல்லூரிகளில், காலத்துக்கு ஏற்றதாக இல்லாத படிப்புகளை
நீக்கிவிட்டு, புதிய படிப்புகளை உருவாக்க, தேசிய அளவில் பொது திட்டத்தை
உருவாக்க உள்ளோம்" என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், மான்த்தா கூறினார்.
ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுமா?
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தும் அரசின் அறிவிப்பு
பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு சிறப்பு
பயிற்சி அளித்து வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட பல்கலையில் புதிய படிப்பு: மே 20ல் விண்ணப்பம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், பி.காம்.,- பி.எல்.,
(ஹானர்ஸ்) என்ற ஐந்தாண்டு பட்டப் படிப்பை, இந்தாண்டு அறிமுகப்படுத்தி
உள்ளது. சட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், 20ம் தேதி துவங்குகிறது.
அரசு கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்
அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக மாணவர்கள் சேர்வதற்கு வசதியாக,
எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பது குறித்த ஆய்வு முடிவை, இந்திய
மருத்துவ கவுன்சில் அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 தனித்தேர்வு: மாற்றுத்திறன் மாணவி 1,159 மதிப்பெண் எடுத்து அசத்தல்
காரைக்காலில், கண் பார்வைக் குறைபாடுள்ள மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வை,
தனித் தேர்வராக எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கணிதமேதை ராமானுஜம் வாழ்க்கை திரைப் படமாகிறது
கணிதமேதை ராமானுஜமின் வாழ்க்கை, "ராமானுஜன்" என்ற பெயரில் திரைப்படமாகிறது.
முன்னேற்றத்தின் முதுகெலும்பு: இன்று தேசிய தொழில்நுட்ப தினம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை
அங்கீகரிப்பது; புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது; வருங்கால
இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை
வலியுறுத்தி, மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் விதிமீறல்: எம்.எல்.ஏ., ஆவேசம்
"நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில், பல்வேறு விதிமீறல்கள்
நடக்கின்றன. கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகள் மட்டுமே, அங்கு
நடத்தப்படுகின்றன. ஒரு பிரிவில், 80 மாணவர்களுக்கு மேல் சேர்க்கக்கூடாது
என, விதி இருந்தும், அங்கு, 800 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்" என
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலபாரதி, அடுக்கடுக்காக பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார்.
ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூ., வலியுறுத்தல்
"ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது; தாய்
மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? - Dinamalar Exclusive
நன்றாக படிக்கக் கூடிய மாணவ, மாணவியருக்கு, "சீட்' கொடுத்து, அவர்களை,
தூங்கும் நேரம் தவிர்த்து, இதர நேரம் முழுவதும், படிக்க வைப்பதும், தேர்வு
எழுத வைப்பதும் போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட வைப்பது தான், நாமக்கல்
மாவட்ட பள்ளிகளின் சாதனைக்கு காரணம் என, கல்வித் துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து
நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின்
அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் இன்று பேசிய
பள்ளிகல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிக கட்டணம்
வசூலித்த 2 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏற்கனவே ரத்து
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 1,500 Probationary Officers பணிகள்
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்
கழகத்தின் பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் +2 தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி
விகிதம் 4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தின் தொன்மையான இசை மற்றும் கலையினை பாதுகாத்து, எதிர்கால இளைய
தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், இசை மற்றும் கவின் கலை
பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பி.இ.: தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல் சிபிஎஸ்இ மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுக்காக
காத்திருக்காமல் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்
கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
பி.இ. கட்-ஆப் மதிப்பெண் குறையும்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்
தமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் பி.இ. படிப்பில்
சேருவதற்கு உரிய ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆஃப்) 0.25 முதல் 0.5 மதிப்பெண்
வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பி.ஏ. பி.எல்., பட்டதாரி மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை: ஜெயலலிதா அறிவிப்பு
சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்.,
படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில்
சலுகை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி
மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட
பல்வேறு முக்கிய பாடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிமான மாணவர்கள் தேர்ச்சி
பெற்றனர்.
பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்
"சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அண்ணா பல்கலைக்
கழகத்தில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது" என உயர்கல்வித்துறை
அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ்
"கணினி வழி கற்றல் மூலம், புரிதல் திறனை மேம்படுத்த, ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்படும்" என,
முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ.
ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல்
தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து வருகிறது.
பத்தாம் வகுப்பில் நழுவியது, இப்போது கிடைத்தது: ஜெயசூர்யா
பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுள் ஒருவரான ஜெயசூர்யா அளித்த பேட்டி;
அவ்வப்போது படிப்பதை படித்துவிட வேண்டும்: முதல் மாணவி காவ்யா
ஒட்டுமொத்த அளவில், 1192 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் மாணவியான தேறிய காவ்யா கூறுவது,
சென்டம் எடுத்த மாணவர்களின் புள்ளி விவரம் - 2013
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சில பாடங்களை
தவிர, அனைத்துப் பாடங்களிலுமே சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
தேர்வெழுதுகையில் நேர மேலாண்மை அவசியம்: அபிநயா
ஒட்டுமொத்த அளவில், 1191 மதிப்பெண்கள் பெற்று, பிளஸ் 2 மாநிலத்திலேயே இரண்டாமிடம் பெற்ற மாணவி அபிநயா கூறுவது,
சென்டம் எடுத்த மாணவர்களின் புள்ளி விவரம் - 2013
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சில பாடங்களை
தவிர, அனைத்துப் பாடங்களிலுமே சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள்
தன்னம்பிக்கை இருந்ததால் சாதிக்க முடிந்தது: முதல் மாணவர் அபினேஷ்
மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான அபினேஷ், திண்டுக்கல்லை
சேர்ந்தவர். தனது வெற்றி குறித்து அவர் கூறியதாவது, "எனது பள்ளி
இயக்குநர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, பள்ளியில் நடத்தப்பட்ட பிராக்டிகல்
தேர்வுகள் மற்றும் வழங்கப்பட்ட முக்கிய ஆலோசனைகள் ஆகியவை பெரிதும் துணை
புரிந்தன.
டெல்லி பல்கலையில் புதிய படிப்புகள்
இந்த 2013-14ம் கல்வியாண்டிலிருந்து, டெல்லிப் பல்கலைக்கழகம், தனது 3
வருட பி.ஏ., பி.எஸ்சி., மற்றும் பி.காம்., ஹானர்ஸ் படிப்புகளை கைவிட்டு,
புதிய 4 வருட இளநிலைப் பட்டப்படிப்பை தொடங்கவுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனக் கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை!
வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது
கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின்
சுயகட்டுப்பாடே, வெற்றியை பிரதானமாக தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது.
அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும்,
எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச
புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை
காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளிகள்
வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை,
முற்றுகையிட்டனர்.
தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க ஒன்பது தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு
நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட,
ஒன்பது தென் மாவட்டங்களில், 18,650 ஏக்கரில், ஒன்பது தொழில் பூங்காக்கள்
அமைக்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல்
படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இயற்கை
அறிவியல் மையம் (ஸ்கூல் ஆப் நேச்சுரல் சயின்ஸ்) வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: இப்பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் மையத்தின் கீழ்,
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் (இன்டகிரேடட் எம்.எஸ்சி இன்
பயாலஜிகல் சயின்ஸ்) பாடப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 13 முதல் விண்ணப்பம் விநியோகம்
2013-14 கல்வியாண்டின் கால்நடை மருத்துவ
படிப்பில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு
சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.
ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி
நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும்
வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள்
காத்திருக்கின்றன.
ஊழியர் பற்றாக்குறை: முதன்மை கல்வி அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை- Dinamalar
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், ஊழியர் பற்றாக்குறை
நிலவுதால், அங்கு பணிபுரிவோர் கூடுதல் பணிச்சுமையால் பெரும் அவதிக்குள்ளாகி
வருகின்றனர்.
அரசு திரைப்பட நிறுவனத்தில் அனிமேஷன் டிப்ளமோ
"எம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில், இந்த ஆண்டு முதல், அனிமேஷன் தொடர்பான டிப்ளமோ படிப்பு
துவங்கப்படும்" என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக்.
படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்க
உள்ளது.
ஜேஇஇ-மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ(மெயின்) தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?
பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது
என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை
நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு
முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவால் பணிந்த பள்ளி நிர்வாகம்
அரசு அறிவிப்புப்படி கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், ஏழை
மாணவியை ஒன்றாம் வகுப்பு சேர்க்க இழுத்தடித்த தனியார் பள்ளி நிர்வாகம்,
ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், அந்த மாணவிக்கு விண்ணப்பம் வழங்கி
உள்ளது.
19 ஆயிரம் மாணவருக்கு இலவச லேப்டாப் வழங்கல்
"நாமக்கல் மாவட்டத்தில், 19 ஆயிரத்து, 167 பேருக்கு, விலையில்லா
லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது" என, விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர்
தங்கமணி பேசினார்.
கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் கோரிக்கை
கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர்களுக்கும் உதவியாளர் பணி
வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை
பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை குறைவை தடுக்க யுக்தி
முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில், குறைந்து வரும்
மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்கும் வகையில், ஆங்கில வழிக் கல்வி கற்பிக்க
நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பி.காம்., படிப்பிற்கு கடும் போட்டி
அரசு கலை அறிவியல் கல்லூரியில், விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.
மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். தமிழகம் முழுவதும்
உள்ள, 8.5 லட்சம் மாணவ மாணவியர், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியுள்ள
நிலையில், வரும் 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எதிரொலி: அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை
"பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ,
மாணவியர்களின் உயிரிழப்பை தடுக்க குட்டைகள், ஏரிகள், கற்கள் தோண்டப்பட்ட
குவாரிகள் மற்றும் மணல் குவாரிகளை, பொதுப்பணி துறை மற்றும் வருவாய் துறை
அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை - தேசிய ஆசிரியர் கல்வி கழகம்
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாய
பாடமாக்க உத்திர பிரதேச அரச உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதற்கு தகுந்தாற் போல்
போதிய அளவு ஆங்கில பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
சட்டப் படிப்புகளுக்கு மே 15ம் தேதி முதல் விண்ணப்பம்
பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) மற்றும், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு
சட்டப் படிப்புகளுக்கும், வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளன.
மாணவியருக்கு விளையாட்டு: சவுதி அரேபிய அரசு அனுமதி
சவுதி அரேபிய அரசு, தனியார் பள்ளிகளில், மாணவியர் விளையாடுவதற்கு,
அனுமதி வழங்கி உள்ளது. அரேபியாவில், பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு உள்ளன. வீட்டை விட்டு வெளியே வரும் போது, பர்தா அணிய
வேண்டும்; வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது; விளையாடுவதற்கும் அனுமதி
இல்லாமல் இருந்தது.
454 மாணவருக்கு ராஜ்ய புரஸ்கார் விருது
நாமக்கல் மாவட்டத்தில், 454 மாணவ, மாணவியருக்கு, ராஜ்ய புரஸ்கார் விருது
வழங்கப்பட்டது.சாரண, சாரணீய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ,
மாணவியருக்கு, மாநில அளவில், உயரிய விருதான, ராஜ்ய புரஸ்கார் விருது, மாநில
ஆளுனர் வழங்கி வருகிறார்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு: 9ம் தேதி முதல் விண்ணப்பம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்
முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் பெறலாம்.
தலைமை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ரத்து- Dinamalar
தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும், ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன்
2ம் தேதி வரை, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை
விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும்
விடுமுறையில் இருப்பர்.
9ம் வகுப்பில் தொடர் மதிப்பீட்டு முறை; அமல்படுத்துவதற்கான ஏற்பாடு தீவிரம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கும்,
முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட
உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம் சென்னையில்
நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி பெற 2015 வரை ஐகோர்ட் கெடு
"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 2015 மார்ச் 31ம்
தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏற்படும் காலிப்
பணியிடங்களில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
மனுதாரர்களுக்கு, கல்வி அதிகாரிகள் தற்காலிக அங்கீகாரம் வழங்க வேண்டும்" என
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
25% இடஒதுக்கீடு சேர்க்கை: தனியார் பள்ளிகள் "கப்சிப்"
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு
இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என, பல மாதங்களாக,
கல்வித்துறை அதிகாரிகள், வாய்வலிக்க பிரசாரம் செய்த போதும், அதை, பள்ளி
நிர்வாகங்கள், சட்டை செய்யவில்லை.
தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி ஆரம்பம் பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
தமிழகத்தில்
6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்பணியில்
ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
யு.பி.எஸ்.சி., தேர்வு: தமிழக அளவில் சென்னை மருத்துவர் முதலிடம்
"மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்"
என யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
எம்.பில்., பிஎச்.டி., ஆய்வு பட்டம் - பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கிடுக்கிபிடி
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வு
பட்டங்களை தரப்படுத்தும் வகையிலான சில கண்டிப்பான திட்டங்களை யு.ஜி.சி.,
வகுத்துள்ளது.
பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.3.10 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் உணவூட்டும் செலவினத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக
உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
சிவில் சர்வீசஸ் தேர்வு: கோவை மாணவர்கள் 5 பேர் வெற்றி
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை
இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை
படைத்துள்ளனர்.
"விருப்பத்துடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது"
"சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க
முடிந்தது,' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை
டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
"மனிதவளத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு'
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை
மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர்
கே.ரோசய்யா கூறினார்.
8 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை
நலிவடைந்த நிலையில் உள்ள 8 பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு
கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
மதுரையில் ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம்
கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில், ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு
முகாம், 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை, மதுரை எஸ்.டி.ஏ.பி., விளையாட்டு
மைதானத்தில் நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4,
குரூப்-2,வி.ஏ.ஓ., தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இலவச
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு 8ம் தேதி கலந்தாய்வு
எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி நடக்கிறது.
மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!
நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங்
தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம்,
தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர்
உள்ளிட்ட பலரின் நினைப்பு.
6 முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஜாமின்ட்ரி பாக்ஸ்: கல்வித்துறை தீவிரம்
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை
சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.
58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ்
கட்டட அனுமதி பெற்றது தொடர்பாக, திருப்பூரில் உள்ள 58 தனியார் பள்ளிகளுக்கு, உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் வெற்றி: எம்.எல்.ஏ., சாதனை
ஒடிசாவில், பாரதிய ஜனதா கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர், 10ம்
வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவரின் ஆதரவாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள தொழில் நுட்ப
பணியாளர் பணியிடத்துக்கு உத்தேச பணி பதிவு மூப்பு பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் படிக்கும் மாணவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்
"தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் தங்களது
தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என பாவாணர் தமிழியக்க செயலாளர்
திருமாறன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க, ஆங்கில வழிக் கல்வியை அதிகரிக்க தமிழக அரசு அதிரடி முடிவு
தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ,
மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில்,
ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த
அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)