"மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, அரசு வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும்" என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரவீந்திரநாத்
கூறியதாவது:
அண்ணாமலை பல்கலையில், இளங்கலை, முதுகலையில், 200க்கும் மேற்பட்ட
மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களை, கவுன்சிலிங் மூலம், அரசு நிரப்ப
வேண்டும். முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை, வெளிப்படைத்
தன்மையுடன் நடத்த வேண்டும். ஆன்-லைன் கவுன்சிலிங் முறையை நடைமுறைப்படுத்த
வேண்டும்.
அரசின் தற்போதைய கவுன்சிலிங் முறை, தகுதி அடிப்படையிலான மாணவர்
சேர்க்கைக்கு எதிராக உள்ளது. இதனால், அதிக மதிப்பெண் எடுத்தும்,
தகுதியானவர்களுக்கு முதுகலையில் இடம் கிடைக்காமல் போகிறது. எனவே, அதிக
மதிப்பெண் எடுத்தும், இடம் கிடைக்காமல் இருக்கும் காத்திருப்போர் பட்டியலை,
பொதுவான காத்திருப்போர் பட்டியலாக வெளியிட வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மத்திய அரசால் நடத்தப்படும்
கவுன்சிலிங் முறையைப் போல, தமிழக அரசும் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு ரவீந்திரநாத் கூறினார்.
No comments:
Post a Comment