ஒடிசாவில், பாரதிய ஜனதா கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர், 10ம்
வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால், அவரின் ஆதரவாளர்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரூர்கேலா அருகில் உள்ள போனெய் என்ற தொகுதியின், பா.ஜ., -
எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், பீம்சென் சவுத்ரி. சமீபத்தில் நடந்து முடிந்த,
10ம் வகுப்பு தேர்வை எழுதி இருந்தார். நேற்று முன்தினம், முடிவுகள்
அறிவிக்கப்பட்டன. அதில், பீம்சேன், மொத்தமுள்ள, 600 மதிப்பெண்களில், 360
மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றார்.
இதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ., வீடு முன்
குவிந்து பாராட்டு தெரிவித்தனர். பள்ளியில் சேர்ந்து படிக்காமல்,
தனித்தேர்வராக தேர்வு எழுதிய பீம் சென், "தேர்வுக்காக நன்றாக படித்தேன்.
நிறைய மதிப்பெண் கிடைக்கும் என, நினைத்திருந்தேன். அது போலவே, 60 சதவீத
மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளேன்," என்றார். எம்.எல்.ஏ., ஆவதற்கு
முன், பீம்சென், வியாபாரியாக இருந்தார்.
No comments:
Post a Comment