அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள தொழில் நுட்ப
பணியாளர் பணியிடத்துக்கு உத்தேச பணி பதிவு மூப்பு பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
இதுபற்றி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா வெளியிட்ட செய்தி குறிப்பு:
அரசு போக்குவரத்த கழகத்தில், காலியாக உள்ள தொழில் நுட்ப
பணியாளர் பணியிடத்துக்கு, 43 மோட்டார் மெக்கானிக், 12 டீசல் மெக்கானிக், 12
ஃபிட்டர், 14 எலக்ட்ரீசியன் உள்ளிட்ட, 81 பணியிடம் பூர்த்தி செய்யப்பட
உள்ளது.
அதற்காக ஒவ்வொரு பிரிவிலும், உத்தேச வயது, பதவி மூப்பு
பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. உரிய
கல்வித்தகுதி பெற்று, குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்த மனுதாரர்கள்,
நாளை (3ம் தேதி) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அசல் கல்விச்சான்று,
ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஜாதி சான்றுடன் நேரில் வந்து
பட்டியலை சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும், பதிவுதாரர்கள், அலுவலகத்துக்கு வரும்போது, இணையதளம்
வழியாக எடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை நகலை, தவறாமல்
எடுத்து வரவேண்டும். இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என
அறிவித்துள்ளார்.
which district
ReplyDelete