சென்னை தலைமைச் செயலகத்தில், கல்வித் தரம், அடிப்படை
கட்டமைப்பு மற்றும் கல்வி திட்டங்களை மத்திய அரசு துணையோடு செயல்படுத்துவது
குறித்த ஆலோசனை நடந்தது.
இதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ,
மாநில பள்ளிக் கல்விதுறை அமைச்சர் வைகை செல்வன் மற்றும் தலைமைச் செயலர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழகத்தில் 14 இடங்களில் சர்வதேச தரத்தில்
பல்கலைக்கழகங்கள் துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அது குறித்து
ஆலோசனையும் நடந்தது.
No comments:
Post a Comment