யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தமிழக கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாரீசை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா.,வின் யுனெஸ்கோ
அமைப்பு மற்றும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் இணைந்து "பிளை
யுவர் ஐடியாஸ்" என்ற பெயரில் எதிர்கால விமானங்கள் குறித்த போட்டி ஒன்றிற்கு
ஏற்பாடு செய்திருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 82 நாடுகளைச் சேர்ந்த
618 குழுக்களில் மொத்தம் 6 ஆயிரம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இதன் இறுதிப்போட்டிக்கு சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்.,
பல்கலை., மாணவர்கள் அனிதா மொகில், பாலகிருஷ்ணன், சோலை ராஜா முரளி, தாமஸ்
மற்றும் குழுத்தலைவர் சக்திவேல் காசிநாத் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்காலத்தில் விமானங்களின் பாகங்களை மாற்றி, ஒரு துளி கூட சத்தம்
இல்லாமல் விமானங்களை இயக்குவது எப்படி என்ற கருத்தின் அடிப்படையில்
இம்மாணவர்கள் விளக்கங்களை அளித்துள்ளனர்.
இவர்கள் தவிர, ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி மற்றும்
மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளனர். இறுதிப்போட்டி வரும் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ளது. முடிவுகள்
ஜூன் 14ம் தேதி அறிவிக்கப்படும். வெற்றி பெறும் குழுவுக்கு 30 ஆயிரம்
யூரோக்கள் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் குழுவுக்கு 15 ஆயிரம்
யூரோக்கள் பரிசாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment