தமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் பி.இ. படிப்பில்
சேருவதற்கு உரிய ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆஃப்) 0.25 முதல் 0.5 மதிப்பெண்
வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை ஒட்டுமொத்த மதிப்பெண் (கட்-ஆப்) வகுப்பு வாரியாக 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்: பி.இ. படிப்பைப் பொருத்தவரை கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு கணிதத்தில் 2,352 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (2,656 பேர்) இந்த எண்ணிக்கை குறைவு.
இந்த ஆண்டு கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200-க்கு 195 மதிப்பெண்ணுக்குமேல் கணிதத்தில் எடுத்துள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் பி.இ. படிப்புக்கு உரிய ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணில் (கட்-ஆஃப்) சரிவு ஏற்பட்டுள்ளது என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
காலியிடங்கள் அதிகரிக்கும்: ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 55,000 காலியிடங்கள் ஏற்பட்டன; கட்-ஆஃப் மதிப்பெண் சரிவு மற்றும் கணிதத்தில் மதிப்பெண் குறைவு காரணமாக தகுதி மதிப்பெண்ணை எட்ட முடியாத நிலை ஆகியவை காரணமாக இந்த ஆண்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.இ. காலியிடங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது.
எம்.பி.பி.எஸ்.--தொடரும் கடும் போட்டி: எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணைக் கணக்கிட்டு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 682 மாணவர்களும் வேதியியல் பாடத்தில் 1,499 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர்; இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம். இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு 36 மாணவர்கள் மட்டுமே (கடந்த ஆண்டு 142 பேர்) 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
எனினும் இயற்பியல் பாடத்தில் 200-க்கு 195 மதிப்பெண்ணுக்குமேல் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பெற்றுள்ளதால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 0.25 முதல் 0.5 வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை கல்லூரிகளுக்கு கடும் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேருவதற்கு கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வகுப்பு வாரியாக கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஒரே கட்-ஆப் மதிப்பெண்ணில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெறுவதே கட்-ஆப் மதிப்பெண் போட்டிக்குக் காரணமாகும்.

No comments:
Post a Comment