எம்.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி நடக்கிறது.
எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல், கடந்த மாதம், 26ம் தேதி
வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, எம்.எஸ்.சி, நர்சிங் பட்ட
மேற்படிப்புக்கு, வரும், 8ம் தேதியும், எம்.பி.டி., மற்றும் எம்.பார்ம்
படிப்புகளுக்கு, வரும், 9ம் தேதியும், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
நடக்கிறது.
"சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தில் நடக்கும்
இக்கலந்தாய்வில் பங்கு பெற, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்பு
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதம் கிடைக்க பெறாதோர் http://www.tnhealth.org, www.tn.gov.inஆகிய
இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்" என, மருத்துவக் கல்வி
மாணவர் சேர்க்கை தேர்வு குழு செயலர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment