தமிழகம் முழுவதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ்
இயங்கும், பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், இன்று (30.05.2013) நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் நல உயர்நிலைப்
பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட
உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்
ஆகியோருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல், அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆன்லைன் மூலம், 30ம் தேதி காலை,
10:00 மணிக்கு நடைபெறும்.
மாறுதல் கோரி விண்ணப்பிக்காத தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர்கள், ஆன்லைன் பொது மாறுதலில் கலந்து கொள்ள இயலாது. பட்டதாரி
ஆசிரியர்கள், காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்கள்
ஆகியோருக்கு, ஆன்லைன் பொது மாறுதல் தொடர்பான விவரம், தனியே
அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment