பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு
அறிவுரைகளை வழங்கும் வகையில் 3 மையங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறை மூலம் பிளஸ்
2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வியை தேர்வு செய்வது
குறித்து ஆலோசனை கூட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மகாதேவி மற்றும் தென்காசி ஆகிய மூன்று
கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் நெல்லை கல்வி மாவட்ட மாணவர்களுக்கு வரும்
20ம் தேதி வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, தென்காசி கல்வி
மாவட்ட மாணவர்களுக்கு தென்காசி ஐ.சி.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 21ம் தேதி
சேரன்மகாதேவி கல்வி மாவட்ட மாணவர்களுக்கு சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங்
கல்லூரி ஆகிய மையங்களில் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இதில் கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்று பல்வேறு உயர் கல்வி
குறித்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதில் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி
பெற்ற மாணவ, மாணவிகள் உயர் கல்வியை தேர்வு செய்ய இந்த ஆலோசனை கூட்டங்களை
பயன்படுத்தி கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment