சட்டப்படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று
துவங்கியது. விண்ணப்பங்களை, அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும்,
பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெறலாம்.
அம்பேத்கர் சட்ட
பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி,
கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இதில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., என்ற
மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.
ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்களும்,
மூன்றாண்டு பி.எல்., சட்ட படிப்பிற்கு, 1,262 இடங்களும் உள்ளன.
இப்படிப்புகளுக்கு, 45 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை, 500 ரூபாய்.
சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்)
படிப்பில், 120 இடங்களும், பி.காம்.- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 60
இடங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 60 இடங்களும் உள்ளன. 70 சதவீதம்
மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விலை 1,000 ரூபாய். விண்ணப்பங்களை, "பதிவாளர், தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் ச ட்ட பல்கலைக்கழகம், சென்னை" என்ற பெயரில் வங்கி
காசோலை எடுத்து மாணவர்கள் பெறலாம்.
ஜூன், 14ம் தேதிக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூன், 25ம் தேதிக்குள், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து, சட்ட பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது: இந்தாண்டு
புதிதாக, பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்) என்ற, ஐந்தாண்டு பட்டப் படிப்பை
அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்படிப்புக்கு மாணவர்களிடம் அதிகளவில்
விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கிறோம்.
பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கு, 7,000 விண்ணப்பங்களும், பி.எல்.,
படிப்புகளுக்கு, 8,000 விண்ணப்பங்களும் இந்தாண்டு வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு சங்கர் கூறினார்.
No comments:
Post a Comment