இந்தியாவில் நாட்டுப்புற கலைகளின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அதன்
பெருமையை மங்காமல் பார்த்துக் கொள்ளும் வகையில், சென்னையில் தேசிய
நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் செயல்பட்டு வருகிறது.
நாட்டுப்புற கலைகள்,
நாட்டுப்புறவியலையும் பதிவு செய்வதுதான் இம்மையத்தின் முக்கிய பணி. இங்கு
இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும்,
கேரளா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களிலும் இம்மையம் சார்பில் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தின் கலையைப்
பற்றி இங்கு பதிவு செய்யப்படுகிறது. அரவாணிகள், பெண்களின் கலைகள்,
வழக்காடுகள் பற்றியும் இங்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டுப்புறவியலில் ஒரு கலை பழையதாகவோ அல்லது புதியதாகவோ
இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை சேர்ந்தது மட்டும்தான்
நாட்டுப்புறவியல் என்று கருத முடியாது. பொதுமக்களிடம் நாட்டுப்புற கலைகள்
குறித்த விழிப்புணர்வு இல்லை.
தெருக்கூத்து தற்போது அழியும் தருவாயில் உள்ளது. உயிருள்ள
கலைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. இது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தி, கலைக்கு உயிர் கொடுக்கும் பணியை இம்மையம் செய்து வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பு பழங்கால கலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் விவசாய முறைகள். மருத்துவ முறைகள்
உள்ளிட்டவற்றுக்கும் அவர்கள் சர்வதேச முக்கியத்துவம் கொடுத்து
வருகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூர், மதுரை, சென்னை பல்கலைக்கழகங்களில்
இத்துறையில் மாணவர்கள் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வுகள்
மேற்கொள்ளலாம். பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியிலும், கேரளாவில்
கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ., நாட்டுப்புறவியல் பயிலலாம்.
மையம் தொடர்பான கூடுதல் விபரங்களைப் பெற: www.indianfolklore.org
No comments:
Post a Comment