ரஷிய கலைப் பண்பாட்டு மையம் சார்பில் ரஷிய கல்விக் கண்காட்சி சென்னையில் மே 18, 19-ஆம் தேதிகளில் நடக்கிறது.
இது தொடர்பாக தென்னிந்திய ரஷிய துணைத் தூதரக கலாசாரத் துறையின் ஓர் அங்கமாகிய ரஷிய அறிவியல் மற்றும் பண்பாட்டு மைய இயக்குநர் விளாடிமிர் வி.மேரி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரஷியாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் படிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. சென்னை ரஷிய கலாசார மையத்தில் நடைபெறவுள்ள கல்விக் கண்காட்சியில் ரஷியாவைச் சேர்ந்த 16 பல்கலைக்கழகங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. ரஷியாவில் மருத்துவப் படிப்பு 6 ஆண்டு காலம் கொண்டது. ஆண்டுக்கு சுமார் ரூ.3.5 லட்சம் செலவாகும். இது தவிர தங்குமிடம், உணவுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் செலவாகும். போதுமான அளவு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இக்கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்றுப் பயனடையலாம் என்றார்.
ரஷியக் கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதியான ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியதாவது: உலகத்தரம் வாய்ந்த கல்வியை ரஷிய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. ரஷியாவில் பயிலும் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 40 ஆயிரம் பேர் முழு கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
கண்காட்சியில் உடனடி சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்கள் உரிய ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். ரூ. 6 கோடி அளவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து சுமார் 600 மாணவர்கள் வரை தேர்வு செய்யப்படுவர். ரஷியாவில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் படிப்புகளை இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் கல்வியாண்டு தொடங்கும். மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை. மருத்துவப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தாற்காலிக சேர்க்கை வழங்கப்படும். அவர்களின் தேர்வு முடிவு வந்த பிறகு, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தகுதி அடிப்படையில் நிரந்தர சேர்க்கை பெறலாம் என்றார்.
ரஷிய மொழி பயிற்றுவித்தல் மைய தலைவர் அனெஸ்தீசிஸ் கூறியதாவது: ரஷிய மொழியில் அடிப்படைக் கூறுகள், உதவிகளைக் கோருவது, ரஷியாவின் உணவு, இதர கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்வது, குறைந்த பட்ச மொழியறிவு ஆகியவை குறித்த ஒரு மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம் என்றார்.
கொல்கத்தாவில் மே 16, மும்பையில் மே 21-ஆம் தேதிகளில் ரஷிய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment