ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி, தொழில் நுட்ப கல்லூரி மற்றும்
பல்கலைக்கழகங்களில், உதவித்தொகையுடன் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஜப்பானில் உள்ள, கல்வி
நிறுவனங்களில், வியாபாரம், ஆடை வடிவமைப்பு மற்றும் குடும்ப பொருளாதாரம்,
கலாசாரம் மற்றும் பொது கல்வி உள்ளிட்ட படிப்புகள், சிறப்பு பயிற்சி
கல்லூரியிலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு
இன்ஜினியரிங், மெட்டீரியல் இன்ஜினியரிங், கட்டடக் கலை மற்றும் சிவில்
இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள், தொழில் நுட்ப கல்லூரிகளிலும்
வழங்கப்படுகின்றன.
சட்டம், அரசியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பான் மொழி,
பொருளாதாரம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட
படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.
ஜப்பான் அரசின் உதவித்தொகையுடன், கல்வி கற்க விரும்பும் மாணவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 1992,
ஏப்ரல், 2ம் தேதிக்கு பின், 1997, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் பிறந்தோர்
விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்கள், அடுத்தாண்டு,
பிப்ரவரி மாதத்திற்குள் தெரிவிக்கப்படும். விண்ணப்பங்களை, "ஜப்பானிய தூதரக
வளாகம், 12/1, செனடோப் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை-18" என்ற முகவரியில்
நேரடியாக பெறலாம்.
No comments:
Post a Comment