சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவுற்ற மாணவர்கள் சேர, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நலிவடைந்த
மாணவர்கள் சேர, 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள், ஏற்கனவே
பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வந்தன.இந்த விண்ணப்பங்களை, முதன்மை கல்வி
அலுவலகத்தில் வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியது.
இதை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்
பள்ளியில், விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வரும் 20ம் தேதி, வரை
மாணவர்கள் இந்த விண்ணப்பங்களை பெறலாம்.
No comments:
Post a Comment