கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, கடந்தாண்டை விட, 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ், கால்நடை மருத்துவ
அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,) மீன் வள அறிவியல்
(பி.எப்.எஸ்சி.,) உணவு தொழில்நுட்பம் (பி.டெக்.,) கோழியின உற்பத்தி
தொழில்நுட்பம் (பி.டெக்.,) உள்ளிட்ட, இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு மொத்தம், 360 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளுக்கான
விண்ணப்ப விற்பனை, கடந்த, 15ம் தேதி துவங்கியது. மருத்துவம், பொறியியல்
அடுத்து, கால்நடை மருத்துவம் மாணவர்களிடையே அதிக முக்கியத்துவம் பெற்ற
படிப்பு என்பதால், துவங்க நாளிலிருந்தே, விண்ணப்ப விற்பனை களைகட்டியது.
மையங்களில், விண்ணப்பங்களை வாங்க மாணவர் கூட்டம் அலைமோதியது.
கடந்தாண்டு, 10, 750 விண்ணப்பங்கள் விற்பனையானது. இந்நிலையில்,
நேற்றுடன் விண்ணப்ப விற்பனை முடிந்த நிலையில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை,
16 ஆயிரத்தை தாண்டியது.
கால்நடை மருத்துவ படிப்பில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பு காரணமாக,
இந்தாண்டு, 60 சதவீதம் விண்ணப்ப விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரன் கூறியதாவது:
கால்நடை துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு புதிய திட்டங்களை
அரசுஅறிமுகப்படுத்தி உள்ளது. இதனால், கால்நடை துறையில் வேலைவாய்ப்புகளும்
அதிகரித்துள்ளது. பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்படும்
நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கால்நடை துறையில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள் குறித்து
மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், இந்தாண்டு விண்ணப்ப விற்பனை
அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரபாகரன் கூறினார்.
No comments:
Post a Comment