சவுதி அரேபிய அரசு, தனியார் பள்ளிகளில், மாணவியர் விளையாடுவதற்கு,
அனுமதி வழங்கி உள்ளது. அரேபியாவில், பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு உள்ளன. வீட்டை விட்டு வெளியே வரும் போது, பர்தா அணிய
வேண்டும்; வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது; விளையாடுவதற்கும் அனுமதி
இல்லாமல் இருந்தது.
கடுமையான நிபந்தனைகளின் பேரில், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்களுக்கு
மட்டும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அனுமதிக்கப்பட்டது. தற்போது,
தனியார் பள்ளிகளில், மாணவியருக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் விளையாட,
சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதில், மாணவியருக்கு பயிற்சி அளிப்பவரும் பெண்ணாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment