தமிழகத்தின் தொன்மையான இசை மற்றும் கலையினை பாதுகாத்து, எதிர்கால இளைய
தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், இசை மற்றும் கவின் கலை
பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இதை அறிவித்த அவர், இசை
சார்ந்த, கவின்கலைப் புலம் சார்ந்த, இளங்கலை மற்றும் முதுகலைப்
பட்டப்படிப்புகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்படும் எனத்
தெரிவித்தார். சிறைத்துறை தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும்
முதலமைச்சர் வெளியிட்டார். மதுரை மற்றும் கோவையில், 30 கோடி ரூபாய்
செலவில், பெண்களுக்கென தனிச் சிறை உருவாக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தருமபுரி மற்றும் விழுப்புரம்
மாவட்டங்களில், 39 கோடி செலவில் மாவட்ட சிறைச்சாலைகள் அமைக்கப்படும்
என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், புழல் மத்திய சிறைக்குத்
தேவையான மின்சாரத்தை, மேற்கூரை சூரிய ஒளி உற்பத்தி முறையை நடைமுறைப்படுத்த
முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிற மத்திய சிறைகள், பெண்கள் தனிச்
சிறைகள் மற்றும் பிற சிறைகளில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தேசிய சட்டப்
பள்ளியில் விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்கும் சீர்மிகு சட்டப்
பள்ளியில், பி.ஏ. பி.எல். ஹார்னர்ஸ் படிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த முதல்
தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை
வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்திய இசை அறபுதமானது.தெய்வீகமானது.அனைவருக்கம் குறைந்தபட்ச இசைப்பயிற்சி மிக மிக அவசியம். எனவே சிறிய -பகுதிநேர -விடுமுறை நாட்களில் மட்டும் செயல்படும் -இசைப்பள்ளிகளை அனைத்து ஒன்றியம் அளவில் அரசு நடத்த வேண்டும். இந்து கோவில்கள் அனைத்திலும் இசை வகுப்புகள் நடத்த வேண்டும். திருப்பதி திருமலை தேவஸ்தானம் தென் மாவட்டங்களில் உலகத்தரம்வாய்ந்த இசைப்பள்ளி ஒன்றைத்துவக்கலாம்.
ReplyDelete