அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது.
தமிழகத்தில், தரமணி
தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, சென்ட்ரல் பாலிடெக்னிக்
கல்லூரி, ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட, 30 அரசு பாலிடெக்னிக்
கல்லூரிகள் உள்ளன. இதில், கட்டடவியல், கட்டட அமைப்பியல், மின்னுவியல்
மற்றும் தொலை தொடர்பியல், கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்
உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், இந்தாண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று (6ம் தேதி) துவங்கி வரும் 24ம்
வரை தேதி நடக்கிறது.
இதில், பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள்,
நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
விண்ணப்பங்கள் விலை 150 ரூபாய். இம்மாதம் 24ம் தேதிக்குள், பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு மனித வள மேம்பாட்டு துறையின் கீழ், சென்னை,
தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி,
கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், தலா, 25 இடங்கள் மாற்றுத்
திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும்
விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், இப்பிரிவில் சேர
விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், ஜாதி சான்றிதழ்களின்
நகலை கொடுத்து, இலவசமாக விண்ணப்பங்களை பெறலாம்.
இதுகுறித்து தரமணி, தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சொர்ணகுமார் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள, 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இப்படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிகளவில் வரவேற்புள்ளதால், கடும் போட்டி நிலவுகிறது," என்றார்.
No comments:
Post a Comment