"தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் தங்களது
தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்," என பாவாணர் தமிழியக்க செயலாளர்
திருமாறன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் நாவலர் வேங்கடசாமி நாட்டார் திருவருள்
கல்லூரியில் 21வது ஆண்டு விழா, கபிலர் இலக்கிய கழக விழா, இமயவரம்பரன்
விளையாட்டு கழக விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர்
கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
பாவாணர் தமிழியக்க செயலாளர் திருமாறன் பேசியதாவது:
தமிழ்நாட்டில், தமிழ்மொழியில் தகுதியானவர்களை காண்பது அரிதாக உள்ளது. தமிழ் மொழி இலக்கியங்களை படிப்பவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில், தமிழ்மொழியில் தகுதியானவர்களை காண்பது அரிதாக உள்ளது. தமிழ் மொழி இலக்கியங்களை படிப்பவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
தமிழாசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தோர்
எண்ணிக்கை குறைவாக உள்ளது. தேர்வில் தேர்ச்சியடைந்த அனைவரும் தமிழாசிரியராக
பணி நியமனம் பெற்றுள்ளனர்.
வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழாசிரியர்கள்
பணியிடங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் தகுதியான தமிழாசிரியர்கள்
கிடைப்பது இல்லை என்ற நிலை உள்ளது. எனவே, தமிழ் படிக்கும் மாணவர்கள் தங்களை
தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்ப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்
நாட்டார் திருவருள் கல்லூரியில் புலவர் வகுப்பில் சேரும் ஐந்து
மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர்
பேசினார்.
No comments:
Post a Comment