தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்
கழகத்தின் பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள் ஜூலை 26-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயை பி.எட். கல்வி
மையங்களில் செலுத்தி, நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது 550 ரூபாய்க்கு
வரைவோலை எடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், 577, அண்ணா
சாலை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து அஞ்சல் வழியாக
பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை
26-ஆம் தேதிக்குள் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு
திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா 500
இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை,
வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 8
நகரங்களில் நடைபெறும்.
தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 11 மணி
முதல் பகல் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு மற்றும் இட
ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் தொடங்கும்.
வகுப்புகள் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. கூடுதல் விவரங்களை அறிய
044 - 2430 6658 அல்லது 044 - 2430 6657 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு
கொள்ளவும்.
No comments:
Post a Comment