2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை
விண்ணப்பங்களை அளிக்கலாம்.
தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு
தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து
அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான
விண்ணப்பங்களை பெறலாம்.
தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும்
எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர்
நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்பக்கூடாது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய்.
தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.
No comments:
Post a Comment