நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 32 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில், ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
"அதிகரித்து வரும் ஆங்கில மோகம் தான், மாணவர் எண்ணிக்கை குறைய காரணம்" எனக்
கூறப்பட்டாலும், "அரசு பள்ளிகளில் தேவைக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை"
என்பதும் முக்கிய காரணமாகும்.
தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவ,
மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, சிறப்பு வகுப்புகள்
எடுக்கப்படுகின்றன; மாணவர்களின் கல்வி மீது, ஆசிரியர்கள் தனி கவனம்
செலுத்துகின்றனர். மாறாக,"பல அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியர் மீதான
ஆசிரியர்கள் கவனம் குறைவாகவே உள்ளது" என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
இதில், நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தான் மாணவர் எண்ணிக்கை
வேகமாக குறைந்து வருகிறது; மாறாக, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள
கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை, ஓரளவு திருப்தியளிப்பதாகவே
உள்ளது.
சமவெளி பகுதிகளில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
அதிகரிக்கிறது; 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்தவில், தேர்ச்சி
விகிதமும் உயர்கிறது. மாறாக, நீலகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர்
எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் கல்வித் துறை தனி கவனம் செலுத்தி, மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment