இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகளை அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் (பொறுப்பு) காளி ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், மறுகூட்டல்
மற்றும் மறு மதிப்பீடுகளின் அடிப்படையில் வரும் ஜூன் 12ம் தேதி
தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். இன்ஜினியரிங் படிப்புகளுக்கான
கலந்தாய்வு வரும் ஜூன் 17 துவங்கும் என தெரிவித்தார்.
அன்று முதல் 19ம்
தேதி வரை விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும். ஜூன் 20ம் தேதி
மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடக்கும் என்று தெரிவித்த அவர், ஆகஸ்ட்
1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment