சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்களுக்கு, இந்தியன்
வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கிருஷ்ணகிரி அணையில்
இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்
விஜயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அணையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி சுய
வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் தற்போது பெண்களுக்கான இலவச அழகுக்
கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
30 நாள்கள் கொண்ட இந்தப்
பயிற்சியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றுப்
பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சி நிறுவனம் மத்திய அரசின் ஊரக
வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில் தமிழக அரசின் உதவியுடன், இந்தியன்
வங்கியால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 89 பேர் பயிற்சி
பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தில் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள தமிழில்
எழுதப் படிக்கத் தெரிந்த சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்
பயிற்சி பெறலாம். சுய உதவிக் குழுக்கள், வறுமை கோட்டிற்கு கீழ்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயிற்சியை அனுபவமிக்க ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.
பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. மதிய உணவு, பயிற்சி நிறுவனத்தால்
கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.
மாட்டுப் பண்ணை அமைத்தல், மண் புழு மற்றும் இயற்கை உரம்
தயாரித்தல், பட்டு வளர்ப்பு, ஆடு, தேனீ வளர்ப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள்
தயாரித்தல், பூச்செடிகள், பழ மரங்கள் பயிர் செய்தல், இரு சக்கர வாகனம்
பழுது நீக்கம், இன்வெர்டர் மற்றும் யுபிஎஸ் பழுது நீக்கம், அழகுக் கலைப்
பயிற்சி, தையல், போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அடுத்ததாக, செல்போன்
பழுது நீக்கம் 30 நாள்கள் பயிற்சியும், 21 நாள்கள் கொண்ட இன்வெர்ட்டர்,
யுபிஎஸ் பழுது நீக்கம் பயிற்சிகள் தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் 18
வயது முதல் 45 வயது வரையுள்ள படித்த சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்
கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் சேர பெயர், முகவரி மற்றும்
தொலைபேசி அல்லது செல்போன் எண்ணுடன் வருகிற 30-ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி சுய
வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி அணை, 9442247921 என்ற
அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment