"கணினி வழி கற்றல் மூலம், புரிதல் திறனை மேம்படுத்த, ஆதி திராவிடர்
மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைக்கப்படும்" என,
முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது
விதியின் கீழ், வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்புக்கு பின் உயர்கல்வி
பயில, கல்வி உதவித் தொகை பெறுவதற்கும், விடுதிகளில் மாணவர்களை சேர்க்கவும்,
யு.பி.எஸ்.சி., பயிற்சி மையத்தில் சேருவதற்கும், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவர்களின் பெற்றோர், ஆண்டு வருவாய், 1 லட்சம் ரூபாய் இருக்க
வேண்டும் என்ற வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியின
மாணவர்களின், ஆண்டு உதவித் தொகை, 18 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்படும். நான்கு ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.
வாடகை கட்டடங்களில் இயங்கும், 52 ஆதி திராவிடர் விடுதிகள், இரு
பழங்குடியினர் விடுதிகளுக்கு, சொந்த கட்டடம் கட்டப்படும். யு.பி.எஸ்.சி.,
தேர்வுக்கு பயிற்சி பெற அளிக்கப்படும் உதவி தொகை போல, மாநில அரசின்
குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி பெற, 700 மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய்
உதவித் தொகை அளிக்கப்படும்.
சட்டம் பயின்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொழில்
துவங்க, அரசு மானியம் அளிப்பது போல், சி.ஏ., பயின்ற மாணவர்கள், தொழில்
துவங்க, 50 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் அளிக்கப்படும்.
மேலும், இந்த இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், கணினி வழியாக கல்வி
பயில்வதற்காக, "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்&' துவங்கப்படும். நடப்பாண்டு
முதல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் கீழ் இயங்கும், 100
மேல்நிலைப் பள்ளிகளில், "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்" உருவாக்கப்படும். இவ்வாறு,
ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment