கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 11 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து, மேலும், 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவ படிப்பில், 280 இடங்களும்,
மீன்வள படிப்பில், 40 இடங்களும், உணவு தொழில்நுட்ப படிப்பிற்கு, 20
இடங்களும், கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்பிற்கு, 20 இடங்கள் என,
மொத்தம், 360 இடங்கள் உள்ளன.
இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், மாநிலம் முழுவதும், 18 மையங்களில்,
கடந்த, 13ம் தேதி துவங்கியது.நேற்றுடன், கால்நடை படிப்பிற்கு, 9,502,
மீன்வள படிப்பிற்கு, 935, உணவு தொழில் நுட்ப படிப்பிற்கு, 610, கோழியின
உற்பத்தி தொழில்நுட்ப படிப்பிற்கு, 312 என, மொத்தம், 11,359 விண்ணப்பங்கள்
விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து கால்நடை மருத்துவ பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
திருநாவுக்கரசு கூறுகையில், ""மொத்தம், 13 ஆயிரம் விண்ணப்பங்கள்
அச்சடிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன், 11,359 விண்ணப்பங்கள் விற்பனையானது.
இதையடுத்து, மேலும், 5,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment