கணிதமேதை ராமானுஜமின் வாழ்க்கை, "ராமானுஜன்" என்ற பெயரில் திரைப்படமாகிறது.
"மோகமுள், முகம், பாரதி" படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இப்படத்தை
இயக்குகிறார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் படம் தயாரிக்கப்படுகிறது.
பழம் பெரும் நடிகை சாவித்ரியின் பேரன் அபிநய், ராமானுஜம் வேடத்தில் நடிக்கிறார்.
மலையாளத்தில், "நைவேத்தியம், சைக்கிள்" ஆகியவற்றிலும், தமிழில்,
"எல்லாம் அவன் செயல், நேரம்" உட்பட, பல படங்களில் நடித்தவருமான, நடிகை பாமா
ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர்
நடிக்கின்றனர்.
ராமானுஜம் வாழ்ந்த கும்பகோணம், படித்த பள்ளி, கல்லூரி, லண்டன்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உட்பட, பல முக்கிய இடங்களில், படப்பிடிப்பு
நடத்தப்படும். இம்மாத இறுதியில், சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது.
No comments:
Post a Comment