பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல்
படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.பெங்களூர் பல்கலைக்கழகத்தின் இயற்கை
அறிவியல் மையம் (ஸ்கூல் ஆப் நேச்சுரல் சயின்ஸ்) வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: இப்பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் மையத்தின் கீழ்,
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி உயிரியல் அறிவியல் (இன்டகிரேடட் எம்.எஸ்சி இன்
பயாலஜிகல் சயின்ஸ்) பாடப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
இது 5 ஆண்டு
படிப்பாகும். இப்படிப்பில் சேர, பி.யூ 2-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், பெங்களூர் அரண்மனை சாலையில்,
சென்ட்ரல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரசரங்கா விற்பனை மையத்தில்
கிடைக்கிறது. பொதுப்பிரிவு மாணவர்கள், ரூ.400-க்கும், எஸ்.சி, எஸ்.டி.
மாணவர்கள் ரூ.200-க்கும், வரைவோலையாக கொடுத்து, விண்ணப்பங்களைப்
பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான
www.bangaloreuniversity.ac.in-ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம்
செய்துக்கொள்ளலாம். விண்ணப்பங்களை இன்டகிரேடட் எம்.எஸ்சி இன் பயாலஜிகல்
சயின்ஸ், ஸ்கூல் ஆப் நேச்சுரல் சயின்ஸ், ஞானபாரதி வளாகம், பெங்களூர் பல்கலைக்கழகம், பெங்களூர்-56 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அபராதம் இன்றி அனுப்ப ஜூன் 14-ம் தேதி கடைசி. ரூ.100 அபராதத்துடன் அனுப்பட
கடைசி தேதி ஜூன் 21. மேலும் விவரங்களுக்கு பெங்களூர் பல்கலைக்கழக இணையதளம்
அல்லது 080- 22961923 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு அறியலாம்
என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment