நீலகிரியில்
பணிபுரியும், அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) ஆசிரியப்
பயிற்றுனர்கள், கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல் பெற்றும், பணியில் இருந்து
விடுவிக்கப்படாமல் இருப்பதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது."அரசு
ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊர்களில் பணி செய்யும் போது தான், மன நிறைவுடன்,
முழு ஈடுபாடுடன் பணி செய்வர்' என்பதால், மாநில அரசு, ஆண்டுதோறும்,
கவுன்சிலிங் நடத்தி, ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்தில், பணி
நியமனம் வழங்கி வருகிறது.
சமீபத்தில் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வு, தேர்வு
வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்கள் கூட, கவுன்சிலிங் முறையில், அவரவர்
சொந்த ஊர்களில், பணி நியமனம் பெற்றனர்.மீறப்படும் விதிமுறைஆனால், கடந்த
பிப்., 2010ல், தேர்வு வாரியம் மூலம் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற,
வெளியூரை சேர்ந்த, எஸ்.எஸ்.ஏ., ஆசிரியப் பயிற்றுனர்கள் பலர், நீலகிரி
மாவட்டத்தில் பணிபுரிகின்றனர். கவுன்சிலிங் மூலம் தான் அவர்களுக்கும், பணி
மாறுதல் வழங்கப்பட வேண்டும்.
கடந்தாண்டு ஜூலையில் நடந்த கவுன்சிலிங்கில்,
2010ல், பணி நியமனம் பெற்ற, ஆசிரிய பயிற்றுனர்கள் முதன் முதலில்
பங்கேற்றனர். இதில், பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்
பயிற்றுனர்கள், பணிமாறுதல் பெற்ற இடங்களில் பணியில் சேர்ந்து விட்ட
நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரிய பயிற்றுனர்கள்,
இன்னும் பணியில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளனர். ஆனால், "சிபாரிசுடன்
வரும், ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு, "நிர்வாக மாறுதல்' என்ற பெயரில்,
அவரவர் சொந்த ஊருக்கு பணி மாறுதல் வழங்கப்படுகிறது' எனக்
கூறப்படுகிறது.வாய்ப்பு கைநழுவும்இந்நிலையில், இந்த கல்வியாண்டிற்கான
கவுன்சிலிங் வரும் 24, 25 தேதிகளில் நடக்க உள்ளது.
இதனால், "ஏற்கனவே,
பணிமாறுதல் பெற்ற ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு, தாங்கள் பணி மாறுதல் பெற்ற
இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு தட்டிப் போகும்' என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பணிமாறுதல் ஆணை பெற்ற முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த
16ம் தேதி முதன்மை கல்வி அலுவலரால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்ட
நிலையில், எஸ்.எஸ்.ஏ., கல்வி நிர்வாகம் மட்டும், மாறுதல் உத்தரவை
அமல்படுத்தாமல் இருப்பது, பல்வேறு குழப்பங்களையும், சர்ச்சைகளையும்
உருவாக்கி வருகிறது.நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர் வசந்தாவிடம் கேட்ட போது,""கவுன்சிலிங்கில், பணி மாறுதல்
பெற்றவர்களை விடுவிக்க, பொதுவாக மே 31க்குள் உத்தரவு வந்துவிடும்; இம்முறை,
இதுவரை மேலிடம் உத்தரவிடவில்லை. வரும் 24ம் தேதி துவங்கும்
கவுன்சிலிங்கால், ஏற்கனவே பணி மாறுதல் பெற்றவர்களுக்கு பாதிப்பு இருக்குமா,
என்பது குறித்த அரசின் நிலைபாடு தெரியவில்லை; அது குறித்து தெளிவாக
எதையும் கூற முடியாது,'' என்றார்.
No comments:
Post a Comment