9ம் வகுப்பு முப்பருவ கல்வி முறையில் உடற்கல்வி பாடத்திற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு
மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி
தேர்வு மூலம் மாணவர்களுக்கு 60 மார்க்குகளும், ஆண்டு முழுவதும் மாணவர்களின்
மதிப்பீட்டிற்கு 40 மார்க்குகளும் வழங்கப்படுகிறது.
மேலும், தற்போது தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக
அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு மட்டுமே தேர்வு மார்க்குகள்
கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் இனி முப்பருவ கல்வி முறையின்படி இந்த
பாடங்களுடன் உடற்கல்வி பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக
பதிவேடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் பராமரித்து மார்க்குகளை மதிப்பிட
வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment