நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் பட்ட படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு,
மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் ஏராளமாக காத்து கிடக்கின்றன.
கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், முதுகலையில், வழங்கி வரும் பல அரிய
படிப்புகளில் ஒன்று தான் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு. இந்தியாவில்,
முதன் முறையாக, சென்னை நந்தனம் கல்லூரியில் 1996ல் இந்த படிப்பு
துவங்கப்பட்டது.
இதில், மீன், இறால் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, மீன் உணவுகளை
தயாரித்தல், மீன்உணவுகள் பதப்படுத்தும் வழிமுறைகள், மீன் பொருட்களை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் உள்ளிட்டவை கற்று தரப்படுகின்றன.
இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பேராசிரியராக பணிபுரியலாம். மத்திய,
மாநில அரசு பணிகளிலும், வெளிநாடுகளிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் குவிந்து
கிடக்கின்றன. மீன், இறால் பண்ணைகளுக்கு, ஆலோசகராகவும் செல்லலாம்.
இதுகுறித்து துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
கால்நடை பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும், மீன்வள அறிவியல் பட்ட படிப்புக்கு இணையானது, நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் படிப்பு. இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், துவக்கத்திலேயே, 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் தகவல்களை பெற, நந்தனம் ஆடவர் கல்லூரி, சென்னை என்ற
முகவரியிலும், 044-2435 1048, 82204 14213 என்ற தொலைபேசி எண்களிலும்
தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment