நாமக்கல் மாவட்டத்தில், 454 மாணவ, மாணவியருக்கு, ராஜ்ய புரஸ்கார் விருது
வழங்கப்பட்டது.சாரண, சாரணீய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ,
மாணவியருக்கு, மாநில அளவில், உயரிய விருதான, ராஜ்ய புரஸ்கார் விருது, மாநில
ஆளுனர் வழங்கி வருகிறார்.
அதன்படி, இந்த ஆண்டு, ஆளுனர்
மாளிகையில் நடந்த விழாவில், ஆளுனர் ரோசய்யா தலைமை வகித்து, விருதுகளை
வழங்கினார். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன், பள்ளிக்
கல்வி இயக்குனர் தேவராஜன், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சவிதா,
சாரண, சாரணீய முதன்மை செயலர் ராஜேந்திரன், மாநில பேராணையர் மேத்தா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 185 சாரணர்களும், 258 சாரணீயர்களும், ராஜ்ய
புரஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்றனர். அவர்களுக்கு, மாநில ஆளுனர் ரோசய்யா
விருது வழங்கினார். மாநில அளவில் உயரிய விருது பெற்று, நாமக்கல்
மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
குமார், மாவட்ட கல்வி அலுவலர் திலகம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்
அருண்மொழிதேவி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அடைக்கண், மாவட்ட முதன்மை புரவலர்
குணசேகரன் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment