நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கு இலவச கட்டாய கல்வி
உரிமைச் சட்டம் பொருந்தாது என்ற தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை
எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
6-ல் இருந்து 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாய கல்வி பெறுவதற்காக மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகளில் நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பொருந்தாது என உத்தரவிட்டது.
தொடக்கக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு தான் இச்சட்டம் பொருந்தும். எனினும் நர்சரி மாணவர்கள் சேர்க்கைக்கும் பொருந்தும் வகையில் மத்திய அரசு தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் கூறியது.
இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து சோஷியல் ஜுரிஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடக்கக் கல்விக்கு மட்டும் தான் பொருந்தும் என தவறாக கருதி தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சட்டத்தின் 13-வது பிரிவு 6 முதல் 14 வயதினரை பள்ளியில் சேர்க்க மட்டுமே பொருந்தும், 6 வயதுக்கு கீழே உள்ளவர்களை அரசு நிதியுதவி பெறாத பள்ளிகளில் சேர்ப்பதற்கு பொருந்தாது என தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment