ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும், சிவில்
சர்வீசஸ் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், தமிழகத்தில், 30 ஆயிரம் பேர்
உட்பட, நாடு தழுவிய அளவில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத
உள்ளனர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு
ஆணையம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கான தேர்வுகளை,
நடத்தி வருகின்றன. இந்த தேர்வுகள், முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு,
நேர்முக தேர்வு என, மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு முதல்முறையாக, இந்திய வனப்பணி தேர்வுக்கும் (ஐ.எப்.எஸ்.,),
முதல் நிலை தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், 1,000 பணியிடங்களை
நிரப்புவதற்காக நடத்தப்படும், முதல்நிலை தேர்வு, இன்று நடக்கிறது.
No comments:
Post a Comment