பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
தினமலரில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், பிரபல
கல்வியாளர்கள் கலந்துகொண்டு, தொலைபேசி மூலம் மாணவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரல் விபரம்
மே 21, செவ்வாய் - உயர்கல்விக்கான வாய்ப்புகள்
காலை 10 முதல் நண்பகல் 12 மணிவரை, பிளஸ் 2 தேர்வில், 60% முதல் 80% வரை
மதிப்பெண் பெற்ற மாணவர்கள், என்ன செய்யலாம் என்பது பற்றி, பிரபல கல்வியாளர்
ரமேஷ் பிரபா கலந்துகொண்டு, தொலைபேசி வழியாக மாணவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.
மே 22, புதன்கிழமை - கவுன்சிலிங் விதிமுறைகள்
மாலை 4 மணிமுதல் 6 மணிவரை, கவுன்சிலிங் விதிமுறைகள் குறித்து, சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர்
ரைமண்ட் உத்தரியராஜ் கலந்துகொண்டு, தொலைபேசி வழியான மாணவர்களின்
கேள்விகளுக்கு நேரடி விளக்கமளிக்கிறார்.
மே 23, வியாழக்கிழமை - என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்?
காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை, இன்ஜினியரிங் கல்லூரிகளிலுள்ள
பாடப்பிரிவுகள் குறித்து, பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி
கலந்துகொண்டு, தொலைபேசி மூலமான மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.
மாணவர்கள், இந்த அரிய வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி, பலன்பெற
வேண்டுமாய், கல்விமலர் இணையதளம், வாழ்த்தி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment