திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கடந்த
பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, 28 பவுன் நகை பறிக்கப்பட்டதாக, 7
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தவிர்க்க, வைகாசி விசாக விழாவில், போலீசாருடன்,
பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி, திருப்பரங்குன்றம் சவுராஷ்டிரா கலை
அறிவியல் கல்லூரிகளின் 40 மாணவர்கள் பாதுகாப்பு, போக்குவரத்தை
ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
"கோயில் பகுதியில், நகை பறிப்பு நடந்ததாக, ஒரு புகார் கூட
வரவில்லை. போலீசாருக்கு மன அழுத்தம் குறைந்தது. இது, சோதனை முயற்சிக்கு
கிடைத்த வெற்றி. சமூக சேவை மூலம், மாணவர்கள் பொறுப்புள்ள குடிமகன்களாக
உருவாக முடியும்," என, பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்தார்.
No comments:
Post a Comment