பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் 2013-14 ம் கல்வி
ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 3ம் தேதி முதல் நடக்கிறது. இப்பள்ளியில்
குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின்
ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த படிப்புகளில் 12 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவ,
மாணவிகள் விண்ணப்பிக்கலாம். நாதசுரம், தவில், தேவாரப்பிரிவுகளில்
சேருவதற்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும். இதர
பாடப்பிரிவுகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
இசைப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும்
தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும்
ஊக்கத்தொகையாக 400 ரூபாய் வழங்கப்படுகிறது.
விலையில்லா சீரூடை, காலணி, சைக்கிள் ஆகியவை
மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் அனைத்து
பாடப்பிரிவுகளுக்கும் பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு 150 ரூபாய் ஆகும். பயிற்சி
நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையாகும்.
இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள்
தலைமையாசிரியர், அரசு இசைப்பள்ளி, திருச்சி மெயின்ரோடு, வெங்கடேசபுரம்,
பெரம்பலூர் என்ற முகவரியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர்
தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment