பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த
ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு,
விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று
தீர்ந்தன.
அதன்பின், சில நாட்கள் அதிக
விண்ணப்பங்களும், சில நாட்கள் குறைந்தும் விற்றுள்ளன. கடந்த, மூன்று
நாட்களாக, படிப்படியாக, விண்ணப்ப விற்பனை குறைந்துள்ளன.
கடந்த, 13ம் தேதி, 9,624 விண்ணப்பங்கள்; 14ம் தேதி, 5,294
விண்ணப்பங்கள்; நேற்று, 15ம் தேதி, 3,839 விண்ணப்பங்கள் விற்றுள்ளன.
நேற்றுடன், விண்ணப்பம் விற்பனை எண்ணிக்கை, 2 லட்சத்து, 26 ஆயிரத்து, 156 ஆக
உயர்ந்துள்ளன. இன்னும், ஐந்து நாட்கள் விண்ணப்பம் வழங்கப்படும் என்பதால்,
அச்சிடப்பட்ட, 2.5 லட்சம் விண்ணப்பங்களும், விற்றுவிடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment