இந்த 2013-14ம் கல்வியாண்டிலிருந்து, டெல்லிப் பல்கலைக்கழகம், தனது 3
வருட பி.ஏ., பி.எஸ்சி., மற்றும் பி.காம்., ஹானர்ஸ் படிப்புகளை கைவிட்டு,
புதிய 4 வருட இளநிலைப் பட்டப்படிப்பை தொடங்கவுள்ளது.
இந்த 4 வருட படிப்பானது பல்வேறு
அம்சங்களைக் கொண்டது. ஒரு மாணவர், இந்தப் படிப்பில் எத்தனை வருடம்
செலவழிக்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் தகுதிநிலைகள் மாறுபடும். ஒருவர், 2
வருடத்திலேயே இந்தப் படிப்பிலிருந்து வெளியேறிவிட்டால், அவர், Associate
Baccalaureate என்ற நிலையைப் பெறுவார். 3 வருடம் படித்து வெளியேறினால்,
Baccalaureate என்ற நிலையைப் பெறுவார். 4 ஆண்டு படிப்பை முழுவதும் நிறைவு
செய்யும் ஒருவர், தனது மேஜர் பாடத்தில், Baccalaureate with Honours என்ற
பட்டத்தையோ அல்லது B.Tech., பட்டத்தையோப் பெறுவார்.
இளநிலை வணிகப் படிப்புகள்
டெல்லிப் பல்கலை, இந்த கல்வியாண்டு முதல், தன்னுடைய 3 வணிகப் படிப்புகளை
இணைக்கவுள்ளது. Bachelor of Business studies(BBS), Bachelor of Financial
Investment and analysis(BFIA) and BA (Hons) Business Economics (BBE)
போன்ற படிப்புகள் இணைக்கப்பட்டு, ஒரே படிப்பாக, புதிய பெயரில் இனி
வழங்கப்பெறும். இதுகுறித்து டெல்லி பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், "இந்தப்
படிப்பானது பன்முகத் தன்மை வாய்ந்தது மற்றும் குறைந்தபட்ச அளவில்
Specialized தன்மையைக் கொண்டது.
தற்போதைய நிலையில், இந்த 3 படிப்புகளிலும் சேர்த்து, மொத்தமாக 891
இடங்கள் உள்ளன. ஆனால், படிப்புகளை இணைப்பதால், இந்த எண்ணிக்கை
பாதிக்கப்படாது மற்றும் இதில் மாணவர்களை சேர்க்க, நுழைவுத்தேர்வு முறையும்
பின்பற்றப்படும். புதிய கட்-ஆப் முறையில் மாணவர் சேர்க்கை
இறுதிசெய்யப்படும்" என்றன.
SC/ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், பொது மற்றும் OBC பிரிவு
மாணவர்களைப் போல், கட்-ஆப் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவர். ஆனால், SC/ST
பிரிவு மாணவர்களுக்கு, தங்களுக்கான கல்லூரி மற்றும் படிப்பை
தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். தற்போதைய நிலையில், 22.5%
இடங்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
SC/ST மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு
ஒரு Slip வழங்கப்பட்டிருக்கும். அதில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
கல்லூரிகள் மற்றும் படிப்புகளின் விபரங்கள் இருக்கும். இதன்மூலம்,
மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment