மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவரான அபினேஷ், திண்டுக்கல்லை
சேர்ந்தவர். தனது வெற்றி குறித்து அவர் கூறியதாவது, "எனது பள்ளி
இயக்குநர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, பள்ளியில் நடத்தப்பட்ட பிராக்டிகல்
தேர்வுகள் மற்றும் வழங்கப்பட்ட முக்கிய ஆலோசனைகள் ஆகியவை பெரிதும் துணை
புரிந்தன.
மேலும், எனது பெற்றோர்கள் முக்கிய உறுதுணையாக இருந்தனர். நண்பர்கள்
ஊக்கப்படுத்தினார்கள். அதேசமயம், சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும்
தன்னம்பிக்கையும் வேண்டும். அந்த தன்னம்பிக்கை எனக்கு இருந்ததால்தான்
சாதித்தேன்" என்றார். இவர், நாமக்கல்லின் கிரீன்பார்க் பள்ளியைச்
சேர்ந்தவர்.
திண்டுக்கல்லில் இருந்து, எதற்கான நாமக்கல் போய் படித்தீர்கள் என்று
கேட்டபோது, "திண்டுக்கல்லைப் பொறுத்தவரை, பள்ளிகளில் முறையாக விடுதி
வசதிகள் இல்லை. எனவே, வீட்டிலிருந்து போய்வருவது கடினமான ஒன்று.
அதனால்தான், சிறப்பான விடுதி வசதிகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தை தேர்வு
செய்தேன்" என்றார்.
No comments:
Post a Comment