"எம்.ஜி.ஆர்., அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில், இந்த ஆண்டு முதல், அனிமேஷன் தொடர்பான டிப்ளமோ படிப்பு
துவங்கப்படும்" என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சினிமா, வீடியோ படங்கள்
தயாரிப்புக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், பிற திரைப்பட துணைப்
பாடங்களையும் மாணவர்களுக்கு கற்றுத் தர, எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம்
மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னையில் செயல்பட்டு வருகிறது.
திரைப்படம் இயக்குதல் மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு,
ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல், படத்தொகுப்பு மற்றும் பதனிடுதல் என்ற,
டிப்ளமோ படிப்புக்கள் மூன்று ஆண்டு காலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
புதிதாக, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9.50 கோடி ரூபாயில், அனிமேஷன்
மற்றும் காட்சிப் பயன்கள் எனும், புதிய பட்டயப் படிப்பு துவங்கப்பட உள்ளது.
இதற்கான சேர்க்கை, ஜூலை மாதம் துவங்கும் என, அரசு தெரிவித்துள்ளது. இந்த
நிறுவனத்தில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக, 99 லட்சம் ரூபாய் செலவில்
திரையரங்கம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், வெளிப்புற படப்பிடிப்புக்காக,
ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு, 15 லட்சம் ரூபாயில், பேருந்து ஒன்று
வாங்கப்பட்டுள்ளது எனவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை கொள்கை
விளக்க குறிப்பில், அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment