மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, 28,300 பேர்
விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்து, அடுத்த மாதம், 6ம்
தேதி மதிப்பெண் தர வரிசை பட்டியல் வெளியிடவும், 18ம் தேதி முதற்கட்ட
கலந்தாய்வை துவங்கவும் திட்டமிட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
ஆகிய மருத்துவ படிப்புக்கு, 2013 -14 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு விண்ணப்பங்கள், இம்மாதம், 9ம் தேதி முதல், 18ம் வரை
வினியோகிக்கப்பட்டன. மொத்தம், 32 ஆயிரங்கள் விண்ணப்பங்கள் விற்கப்பட்ட
நிலையில், 28,300 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்தாண்டு, மொத்தம் விற்பனையான, 39 ஆயிரம் விண்ணப்பங்களில், 29 ஆயிரம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன என குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று மாலை, 5 மணிக்குள், தபால்
மூலம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், இன்று ஏற்றுக் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment