காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளிகள்
வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை,
முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் உள்ளது. இங்கு, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், படித்த இளைஞர்கள்
வேலை வாய்ப்பு வழங்கக்கோரி, பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்து நீண்ட நாட்களாகியும், வேலை வாய்ப்பு
வழங்காததால், நேற்று காலை 11:30 மணிக்கு (காது கேளாதோர் மற்றும் வாய் பேச
முடியாத), மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கு வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் சங்கரன், நீங்கள்
முறையாக மனு அளித்து விட்டு செல்லுங்கள். அதற்கு உரிய பதில் அளிப்பதாக
அவர்களிடம், உறுதியளித்த பின்னர் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தை
கைவிட்டனர்.
No comments:
Post a Comment