ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை
கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.
அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு
எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அரசு உதவி பெறாத
தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையில் பாகுபாடு காட்டப்படுவதால், கல்வி
உரிமை சட்டத்தில், நர்சரி பள்ளிகளை சேர்க்கக் கோரி, பொது நல மனு ஒன்று,
டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், பிறப்பித்த உத்தரவு: கல்வி உரிமை
சட்டத்தில், நர்சரி பள்ளிகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த விஷயத்தில்,
பள்ளிகளே முடிவு செய்து கொள்ளலாம் என, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த
உத்தரவு சரியே.
இருந்தாலும், கல்வி உரிமை சட்டத்தில், ஆறு வயதுக்கு உட்பட குழந்தைகளும்
பயன்பெறும் வகையில், நர்சரி பள்ளிகளில் சேர வசதியாக, கல்வி உரிமை
சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுபற்றி மத்திய அரசு ஆலோசிக்க
வேண்டும். இவ்வாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தன்னர்வ தொண்டு நிறுவனம் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment