அரசு கலை அறிவியல் கல்லூரியில், விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.
மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். தமிழகம் முழுவதும்
உள்ள, 8.5 லட்சம் மாணவ மாணவியர், பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதியுள்ள
நிலையில், வரும் 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
பொறியியல்
படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், கடந்த, 4ம் தேதி துவங்கியது. மருத்துவ
படிப்பிற்கு, வரும், 9ம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள நிலையில்,
இந்தாண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை விண்ணப்ப
வினியோகம், நேற்று துவங்கியது.
சென்னையில், ராணி மேரி, தியாகராஜர், புதுக் கல்லூரி
உள்ளிட்ட கல்லூரிகளில், விண்ணப்ப வினியோகம் துவங்கியது. காலை, 9:00 மணி
முதலே, மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
நந்தனம், விவேகானந்தா, மாநில கல்லூரி உள்ளிட்ட அரசு
கல்லூரிகள் மற்றும் லயோலா, எத்திராஜ் உள்ளிட்ட அரசு உதவி பெறும்
கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்,
மே 9ம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
கலை அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பில் சேர,
மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பி.காம்., படிப்பிற்கான,
"கட்-ஆப்" மதிப்பெண் இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.காம்., படிப்பிற்கு அடுத்து, பி.சி.ஏ., - பி.எஸ்சி., -
பி.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கும், மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி
நிலவுகிறது.
No comments:
Post a Comment