வி.ஐ.டி., பல்கலையில், பி.டெக்., பட்டப்படிப்பிற்கான மாணவர் கலந்தாய்வை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று துவக்கி வைத்தார்.
வி.ஐ.டி., பல்கலையில், 2013-14ம் ஆண்டுக்கான, 14 பொறியியல்
பட்டப்படிப்பு மற்றும் சென்னை வளாகத்தில், ஐந்து பி.டெக்., பட்டப்படிப்பில்
சேருவதற்கான நுழைவுத் தேர்வு, ஏப்ரல் மாதம் நடந்தது.
நுழைவுத் தேர்வு முடிவுகள், கடந்த, 6ம் தேதி, இணையதளங்கள் மூலமாக
வெளியிடப்பட்டன. நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள், வி.ஐ.டி., வேலூர்
மற்றும் சென்னையில் சேருவதற்கான கவுன்சிலிங், நேற்று, வி.ஐ.டி., பல்கலையில்
துவங்கியது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, அனுராக் பிரகாஷ் என்ற மாணவருக்கு,
கணினி அறியவில் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான அனுமதி உத்தரவை,
வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கி, கவுன்சிலிங்கை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, கவுடா சோமேஸ்வர் தேவராஜா
மற்றும் வருஷிக் அம்ருத்யா ஆகியோருக்கும் அனுமதி உத்தரவுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வி.ஐ.டி., துணைவேந்தர், துணைத் தலைவர்கள், இணை வேந்தர்
உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment