தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், 10 மற்றும் பிளஸ் 2
படிக்கும் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புகள் குறித்த முகாமை நடத்துகிறது.
வரும், 21ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, சென்னை,
பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், முகாம் நடைபெறுகிறது.
இதில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பாதுகாப்பு உள்ளிட்ட துறை சார்ந்த
வல்லுநர்கள் பங்கேற்று, ஆலோசனை வழங்கவுள்ளனர்.
முதலில் பதிவு செய்யும், 50 பேருக்கு மட்டுமே, இந்த வாய்ப்பு
வழங்கப்படுகிறது. 044-24410025 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அனுப்பியுள்ள
அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment