"கல்வித்துறை மூலம் வழங்கப்படும், விலையில்லா பொருள்களை
கொள்முதல் செய்து வினியோகிக்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்
என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா
கூறினார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட
அறிவிப்பு:கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா
பொருள்கள் வழங்கப்படுகின்றன. இப்பொருள்களை, கொள்முதல் செய்து
வினியோகிக்கும் பணி, தமிழ்நாடு பாட நூல் கழகத்துக்கு வழங்கப்படும். இதற்கு
ஏதுவாக, இதன் பெயர், "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்' என,
மாற்றப்படும்.
மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு
பெறும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், 10 கோடி ரூபாய் தனி நிதி
ஒதுக்கப்படும். பொருளாதாரத்தில், பின் தங்கிய மாணவியர் மேல்நிலைப் படிக்க
ஏதுவாக, 44 பெண்கள் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இவ்விடுதிகளுக்கு, மத்திய அரசின் பங்குத் தொகை, போதுமானதாக இல்லை.எனவே,
இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், திட்டத்துக்குத் தேவையான
கூடுதல் நிதியாக, 31 கோடி ரூபாயை, தமிழக அரசு வழங்கும்.கல்வியில்
பின்தங்கியுள்ள, 44 ஒன்றியங்களில், மாதிரிப் பள்ளிகள் கட்ட, கூடுதல்
நிதியாக, 38 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment