தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை.,யில் 2014ம் ஆண்டிற்கான பி.எட்
விண்ணப்பங்கள் கல்வி மையத்தில் வழங்கப்படுகிறது. ஏதேனும் இளநிலை பட்டம்
பெற்றவர்கள், 2 ஆண்டு அனுபவம் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை மாதம் 27ம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பத்தை பாளை கிறிஸ்துராஜா பள்ளி அருகில் உள்ள தமிழ்நாடு திறந்த
நிலை பல்கலை., மையத்தில் 550 ரூபாய் செலுத்தி பெற்று கொள்ளலாம். மேலும்,
பி.ஏ. பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி, பி.சி.ஏ, பட்ட மேற்படிப்புகளான எம்.ஏ,
எம்.காம், எம்.எஸ்சி, எம்.சி.ஏ உட்பட பல்வேறு படிப்புகள், சான்றிதழ்
படிப்புகளுக்கும் அட்மிஷன் நடந்து வருகிறது.
18 வயது நிரம்பியவர்கள், எந்தவித அடிப்படை கல்வி தகுதி இல்லாதவர்கள், 8,
9, 10 மற்றும் 11ம் வகுப்பு படித்தவர்கள் 6 மாத ஆயத்த படிப்பு
தேர்ச்சிக்கு பின்னர் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் சேரலாம்.
அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு பாளை ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., மையத்தை அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர்
கணேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment